43. தாத்பர்யம் to துத்தம்

841. தாத்பர்யம் = கருத்து, பொருள், அபிப்ராயம், குறிக்கோள்.

842. தாதா3த்ம்யம் = ஒற்றுமை, இயற்கையான ஒற்றுமை,
பேதம் அற்ற இணைப்பு.

843. தாத்3ருச’ = அது போன்ற, அவனைப் போன்ற, அவளைப் போன்ற.

844. தாப: = சூடு, பீடை, உஷ்ணம், துன்பம், கஷ்டம், துக்கம்.

845. தாமரஸம் = செந்தாமரை, தங்கம், தாமிரம்.

846. தாமஸ = கருப்பான, இருளான, தமோ குணம் உடைய .

847. தாம்ராக்ஷ: = குயில், காக்கை.

848. தாரக: = கரை ஏற்றுபவன், காப்பாற்றுபவன், கொண்டுசெல்பவன்.

849. தாரா = நக்ஷத்ரம், கோள், கண்ணின் கருவிழி, முத்து, வாலியின் மனைவி, ப்ருஹஸ்பதியின் மனைவி.

850. தாருண்யம் = இளமை, யௌவனம், புதுமை.

851. தீரம் = கரை, தடம், ஓரம், முனைப்பகுதி.

852. தீர்ண = கடக்கப்பட்ட, தாண்டிச்செல்லப்பட்ட, பரவிய, மிஞ்சப்பட்ட, மேலேசென்ற.

853. தீர்த்த2ம் = வழி, பாதை, சாலை, நீர் நிலை, புனிதத் தலம், ஆற்றுப்படிக்கட்டு, சாதனம், ஆற்றைக்கடக்கும் இடம்.

854. தீவர = கடல், வேட்டையாடுபவன்.

855. தீவ்ர = கடுமையான, உக்கிரமான, அடர்ந்த, கொடுமையான, கூர்மையான, காரமான, சூடான, பயங்கரமான.

856. துங்க3 = உயரமான, மேலான, நீண்ட, முக்கியமான, முதன்மையான.

857. துங்கீ3 = இரவு, மஞ்சள்.

858. துச்ச2 = காலியான, லேசான, சூன்யமான, சிறிய, அற்பமான, மட்டமான, ஏழையான, திக்கற்ற.

859. துண்ட3ம் = வாய், முகம், பன்றியின் நீண்ட மூக்கு, கருவியின் நுனி, யானைத் துதிக்கை.

860. துத்தம் = மயில் துத்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *