821. தாத்பர்யம் = கருத்து, பொருள், அபிப்ராயம், குறிக்கோள்.
822. தாதா3த்ம்யம் = ஒற்றுமை, இயற்கையான ஒற்றுமை,
பேதம் அற்ற இணைப்பு.
823. தாத்3ருச’ = அது போன்ற, அவனைப் போன்ற, அவளைப் போன்ற.
824. தாப: = சூடு, பீடை, உஷ்ணம், துன்பம், கஷ்டம், துக்கம்.
825. தாமரஸம் = செந்தாமரை, தங்கம், தாமிரம்.
826. தாமஸ = கருப்பான, இருளான, தமோ குணம் உடைய .
827. தாம்ராக்ஷ: = குயில், காக்கை.
828. தாரக: = கரை ஏற்றுபவன், காப்பாற்றுபவன், கொண்டுசெல்பவன்.
829. தாரா = நக்ஷத்ரம், கோள், கண்ணின் கருவிழி, முத்து, வாலியின் மனைவி, ப்ருஹஸ்பதியின் மனைவி.
830. தாருண்யம் = இளமை, யௌவனம், புதுமை.
831. தார்கிக: = தர்க்கம் செய்பவன், தர்க்க சாஸ்திரம் அறிந்தவன், நியாய சாஸ்திரம் கற்றவன்.
832. தார்க்ஷ்ய: = கருடன், அருணன், வண்டி, குதிரை, பாம்பு, பறவை.
833. தால: = பனை மரம், கை கொட்டுதல், தாளம் போடுதல், ஜால்ரா, உள்ளங்கை, பூட்டு, தாழ்ப்பாள், வாளின் கைப்பிடி.
834. தாலபத்ரம் = பனை ஓலை.
835. தாவத் = இவ்வளவு, அவ்வளவு, இத்தனை.
836. திக்த: = கசப்பு ருசி, குடஜமரம், வாசனை, கைப்பு.
837. திக்3மம் = (உணவில்) காரம்.
838. திதிக்ஷா = பொறுமை.
839. திந்த்ரிணீ = புளி.
840. திமி: = கடல், கடல்மீன்.