41. தமோக்4ன: to தாத்காலிக

801. தமோக்4ன: = சூரியன், சந்திரன், நெருப்பு, அக்னி, விஷ்ணு, சிவன், அறிவு.

802. தரங்க3: = அலை, வரிசை, ஒரு நூலின் ஒரு பகுதி, குதித்தல், தாண்டல், வேகமான ஓட்டம், துள்ளி ஓடுவது, ஆடை, துணி.

803. தரங்கி3ணீ = ஆற்றுப் பிரவாஹம்.

804. தரணீ = ஓடம், படகு.

805. தரல = நடுங்கும், சஞ்சலமான, சபலமான, பளபளப்பான, காமம் உடைய, தன் இஷ்டம் போல நடக்கும்.

806. தரல: = வைரம், இரும்பு, ஆழம், அடிப்பாகம், சமமான பரப்பு, கழுத்துமாலை, மாலையின் மையத்தில் உள்ள ரத்தினம்.

807. தரஸ்வின் = வேகமாகச் செல்லும் தூதன், வீரன், காற்று, கருடன்.

808. தரு: = மரம்.

809. தருண = இளம் வயதுள்ள, யுவனான, புதிய, தெளிந்த, மிருதுவான, உற்சாகமான.

810. தருணீ = இளம் வயதினள்.

811. தர்ஜனம் = பயமுறுத்துதல், நிந்தித்தல்.

812. தர்ப்பணம் = திருப்தி, மகிழ்ச்சி, இறந்த மூதாதையருக்குச் செய்யும் நீர்க்கடன் முதலியன.

813. தலம் = தடம், இடம், உள்ளங்கை, குதிகால், அடிப்பாகம், ஆதாரம், அடித்தளம், தாழ்ந்த நிலை, மட்டமான நிலை.

814. தல்பம் = படுக்கை, மெத்தை, சோபா, மச்சு, மாடி, மண்டபம்.

815. தஸ்கர: = திருடன், கொள்ளைக்காரன்.

816. தாடங்க: = காதணி, காதோலை.

817. தாட3னம் = அடித்தல், உதைத்தல்.

818. தாண்ட3வ: = தாண்ட3வம் = சிவனின் நடனம், நாட்டியம்.

819. தாத: = தகப்பன், அன்புடன் அழைக்கும் சொல், நட்பு, தயை.

820. தாத்காலிக = தற்காலிகமான, உடனடியாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *