40. தனய: to தமீ

781. தனய: = மகன், ஆண் சந்ததி.

782. தனு = ஒல்லியான, மெலிந்த, பலம் குன்றிய, நுண்மையான, அழகான, நேர்த்தியான, மிருதுவான.

783. தனு: = உடல், ஆள், வெளித்தோற்றம், இயற்கை, உருவம், குணம், உடலின் தோல்.

784. தனுஜ: = தனூஜ: = மகன்.

785. தனுஜா = தனூஜா = மகள்.

786. தன் = நீட்ட, விஸ்தரிக்க, பரப்ப, மூட, உருவாக்க, வழங்க.

787. தந்தி = கயிறு, நூல், வரிசை, வகை.

788. தந்த்ரம் = நெசவுத்தறி, வழித்தோன்றல், பரம்பரை, சட்டம், விஞ்ஞானம், தந்திர சாஸ்திரம், ரக்ஷை மந்த்ரம், சபதம்.

789. தந்த்ரி = கயிறு, நாண், தந்தி, வீணைத் தந்தி.

790. தப: = உஷ்ணம், நெருப்பு, சூர்யன், கோடைக்காலம், தவம்.

791. தபன: = சூரியன், கோடைக் காலம், சூரிய காந்தக்கல், சிவனின் ஒரு பெயர், எருக்கஞ்செடி.

792. தபனதனய: = தபனாத்மஜ : = யமன், சனீஸ்வரன், சுக்ரீவன்,கர்ணன்.

793. தபனதனயா = யமுனா நதி, கோதாவரி.

794. தபஸ் = சூடு, உஷ்ணம், நெருப்பு, வேதனை, துன்பம், கஷ்டம்.

795. தபஸ்வின் = துறவி, பிச்சை எடுப்பவன், நாரதமுனிவர்.

796. தபோநிதி4: = மகான், தவசி, சான்றோன்.

797. தப்த = சூடாக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, காய்ச்சப்பட்ட, உருக்கப்பட்ட, துன்பம் அடைந்த, பீடிக்கப்பட்ட.

798. தமஸ் = இருட்டு, நரகத்தின் இருள், மன இருள், அறியாமை, பிரமை, தமோ குணம், துக்கம், பாபம், ராஹு, அஞ்ஞானம்.

799. தமால: = நெற்றியில் இடும் சந்தனக்குறி, போர்வாள், புகையிலை, பட்டாக்கத்தி.

800. தமீ = இருண்ட, இருட்டு, மயக்கம், மஞ்சள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *