721. ஜ்யோத்ஸ்னா = நிலா, பிரகாசம், துர்க்கை, நிலவொளி இரவு.
722. ஜ்வர: = ஜுரம், உஷ்ணம், சூடு, தாபம், துக்கம், வருத்தம்.
723. ஜ்வலனம் = எரிதல், பிரகாசித்தல், தீப்பரவுதல்.
724. ஜ்வால: = நெருப்பு, பிரகாசம், தீவட்டி.
725. ஜ்வாலாமுகி2 = எரிமலை, தேவியின் புனிதத்தலம்.
726. ஜ்வாலின் = சிவன்.
727. ஜ்ஜங்கார: = வண்டுகளின் ரீங்காரம் போன்ற சப்தம்.
728. ஜ்ஜடிதி = வேகமாக, உடனேயே.
729. ஜ்ஜர்ஜர: = மத்தளம், ஜால்ரா, பிரம்பு, கலியுகம், கரண்டி.
730. ஜ்ஜ ஷ: = மீன், பெரிய மீன், மீனராசி, உஷ்ணம்.
731. ஜ்ஜ ஷம் = வறண்ட காடு.
732. ஞபித = தெரிவிக்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட, சொல்லித் தரப் பட்ட.
733. ஞாத = அறிந்த, புரிந்த, தெரிந்த.
734. ஞாத்ரு = புத்திசாலி, அறிவாளி, அறிந்தவன்.
735. ஞானம் = அறிவு, தேர்ச்சி, கல்வி, உணர்வு, மோக்ஷ ஞானம்.
736. ஞான சக்ஷுஸ் = ஞானக் கண், அறிவுக்கண்.
737. ஞானத3: = குரு, ஆசான்.
738. ஞானதா3 = கலைமகள், சரஸ்வதி.
739. ஞானமய = அறிவு நிறைந்த, அறிவு முதிர்ந்த.
740. ஞாபகம் = நினைவு, பொருள் பொதிந்த பேச்சு, நினைவுத் திறன்.