701. ஜீவா = தண்ணீர், பூமி, வில்லின் நாண் கயிறு, வசம்புச் செடி.
702. ஜீவாத்மன் = ஆன்மா, ஜீவன்.
703. ஜீவிதம் = வாழ்க்கை,வாழ்க்கைக் காலம், வாழ்க்கைச் சாதனம்.
704. ஜுகு3சஸனம் = நிந்தை, வசை, வெறுப்பு, நவரசங்களில் ‘பீபத்ஸ’ ரசம்.
705. ஜுஷ்ட = இன்பம் அடைய, திருப்தி அடைய, விரும்பப்பட்ட.
706. ஜூ: = வேகம், விண்வெளி, அரக்கி, சரஸ்வதி.
707. ஜுட: = தலைமுடியின் ஜடை, சடைமுடி.
708. ஜ்ரும்ப4: = கொட்டாவி விடுதல், வாயைப்பிளத்தல், மலர்தல், பரவுதல், வியாபித்தல், நீளுதல்.
709. ஜேமனம் = உணவு, சாப்பாடு.
710. ஜைத்ரம் = ஜெயம், வெற்றி, மேன்மை.
711. ஜோடிங்க3: = சிவனைக் குறிக்கும் சொல்.
712. ஜோஷம் = தன்னிச்சை ஆக, மெளனமாக.
713. ஜோஷா = பெண்.
714. ஜ்யா = வில்லின் நாண் கயிறு, பூமி, தாயார்.
715. ஜ்யானி : = கிழத்தனம், அழிவு, தியாகம், ஓடை, ஆறு, நஷ்டம்.
716. ஜ்யேஷ்ட2: = மூத்த அண்ணன், ஜ்யேஷ்ட மாசம்.
717. ஜ்யேஷ்டா2 = மூத்த தமக்கை, கையின் மைய விரல் (பாம்பு விரல்), பல்லி, கங்கை, மூதேவி.
718. ஜ்யோதிர்மய = ஒளிமயமான, நட்சத்திரங்களுடன் கூடிய.
719. ஜ்யோதிஷம் = ஆறு வேந்தங்களில் ஒன்றான சோதிடம்.
720. ஜ்யோதிஸ் = பிரகாசம், ஒளி, பளபளப்பு, மின்னல், பார்வையின் சக்தி, புத்தியின் சக்தி, விண்ணில் உள்ள கோள்கள்.