35. ஜார: to ஜீவன்முக்த:

681. ஜார: = ஆசை நாயகன், கள்ளக் காதலன்.

682. ஜாலம் = வலை, கண்ணி, கூடு, கவாக்ஷி, ஜன்னல், கூட்டம், குவியல், மந்திர தந்திரம், மலராத பூ, தூண்டில்.

683. ஜாலகம் = வலை, கூட்டம். சேர்க்கை, ஜன்னல், கவாக்ஷி, மொக்கு, மலராத பூ, பிரமை, கபடம், ஏமாற்றம், தலைமுடியில் அணியும் அணிகலன்.

684. ஜாலிக: = மீன் பிடிப்பவன், பட்சிகளைப் பிடிப்பவன், சிலந்தி, வஞ்சகன், அயோக்கியன்.

685. ஜி = ஜெயிக்க, தோற்கடிக்க, ஜெயமடைய, அடக்க, மேம்பட, ஆதிக்கத்தில் கொண்டுவர.

686. ஜிகீ3ஷா = ஜெயிக்க, வசமாக, ஆசை, போட்டி, மேன்மை, செயல்.

687. ஜிகா4ம்ஸு: = எதிரி, கொல்ல விரும்புவன்,

688. ஜிக்ஞாஸா: = அறிந்துகொள்ள விரும்புபவன், தெரிந்து கொள்ள விரும்புபவன்.

689. ஜித = ஜெயிக்கப்பட்ட, அடக்கப்பட்ட, அடையப்பட்ட, வசீகரிக்கப்பட்ட.

690. ஜின: = ஜைனத் துறவி

691. ஜிதேந்த்ரிய = புலன்களை அடக்கிய.

692. ஜிஷ்ணு: = சூரியன், இந்திரன், விஷ்ணு, அர்ஜுனன்.

693. ஜிஹ்வா = நாக்கு, அக்னியின் ஜ்வாலை.

694. ஜீமூத: = மேகம், மலை, இந்திரனின் ஒரு பெயர்.

695. ஜீர்ண = பழைய, புராதனமான, அழிந்த, கிழிந்த.

696. ஜீர்ணம் = சாம்பிராணி, பலஹீனம், கிழத்தன்மை.

697. ஜீவ: = வாழ்க்கைத் தத்துவம், மூச்சுக் காற்று, பிராணன், ஆன்மா.

698. ஜீவக: = உயிருள்ள பிராணி, வேலைக்காரன், பௌத்த பிக்ஷூ, பிச்சைக்காரன், வட்டி வாங்குபவன், பாம்பு பிடிப்பவன்.

699. ஜீவனம் = உயிர் வாழ்தல், இருத்தல், வாழ்க்கைக் கொள்கை, உயிர் வாழும் சக்தி.

700. ஜீவன்முக்த: = பரம் பொருளை அறிந்து கொண்டதால் இப்பிறவிலேயே விடுதலை அடைந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *