34. ஜாக்3ரத் to ஜாயு:

661. ஜாக்3ரத் = விழிப்புடன் உள்ள, எச்சரிக்கையாக உள்ள, தெளிவாக உள்ள, பிரகாசமாக உள்ள.

662. ஜாங்க3ள = கிராமீய, அழகான, நாகரீகம் அற்ற, வறண்ட,
முரட்டுத் தனமான.

663. ஜாட2ர: = ஜீரண சக்தி.

664. ஜாட்3யம் = குளிர்ந்ததன்மை, அக்கறையின்மை, சோம்பேறித்தனம், மந்த புத்தி, ருசியின்மை, மூடத்தனம்.

665. ஜாத = பிறந்த, உண்டாக்கப்பட்ட, வளர்ந்த, எழுந்த, ஏற்பட்ட.

666. ஜாதம் = பிராணி, உற்பத்தி, வகை, வகுப்பு, ஜாதி.

667. ஜாதவேத3ஸ் = ஜாதவேத3: = அக்னி.

668. ஜாதி = கோத்தரம், குலம், ஜாதி, இனம், வகுப்பு, வகை, வர்க்கம்.

669. ஜாத்ய = ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மனதைக்கவரும், அழகான.

670. ஜானபத3: = நாட்டுப்புறத்தான், கிராமத்தான், நாடு, விஷயம்.

671. ஜானு = முழங்கால்.

672. ஜாமா = மருமகள்.

673. ஜாமாத்ரு = மருமகன், மாப்பிள்ளை, எஜமானன், பிரபு, சூரிய காந்திப்பூ.

674. ஜாமி: = உடன் பிறந்தவள், மகள், மகனின் மனைவி, நல்ல குணவதியான பெண்மணி.

675. ஜாமேய: = தமக்கை அல்லது தங்கையின் மகன்.

676. ஜாம்ப3வம் = பொன், தங்கம், நாவல் பழம்.

677. ஜாம்பூ3நத3ம் = பொன், தங்கம், தங்க ஆபரணம், ஊமைத்தைச் செடி.

678. ஜாயா = மனைவி.

679. ஜாயாபதி = கணவன் மனைவி.

680. ஜாயு: = மருந்து, மருத்துவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *