33. ஜய: to ஜாகரணம்

641. ஜய: = வெல்லுதல், ஜெயித்தல், வெற்றி அடைதல், புலன்களை அடக்குதல்.

642. ஜயகோ3ஷ: = வெற்றி பிரகடனம்.

643. ஜயதேவ: = கீதகோவிந்தம் என்ற நூலின் ஆசிரியர்.

644. ஜயபால: = அரசன், விஷ்ணு, பிரம்மா.

645. ஜயஸ்தம்ப4: = வெற்றியைக் குறிக்கும் ஒரு தூண் அல்லது கட்டிடம்.

646. ஜரட2 = கடினமான, கெட்டியான, திடமான, பழைய, வயதான, தேய்ந்து போன, பலம் குறைந்த, பழுத்த.

647. ஜரா = கிழத்தன்மை, பலஹீனம், வலிமைக்குறைவு.

648. ஜர்ஜர = கிழ, வயதான, பலஹீனமான, பழுதான, துண்டுதுண்டான.

649. ஜலக்ரியா = இறந்த முன்னோர்களுக்குச் செய்யும் நீர்க்கடன்.

650. ஜலஜா: = நீரில் வாழும் பிராணி, மீன், பாசி, சந்திரன்.

651. ஜலஜம் = தாமரை, சங்கு.

652. ஜலதரங்கம் = அலை, கிண்ணங்களில் தண்ணீர் விட்டு வைத்து வாசிக்கும் இசைக்கருவி.

653. ஜலத3: = மேகம்.

654. ஜலதி4: =கடல், எண் கோடி கோடி.

655. ஜலாச’ய: = மடுவு, குளம், ஏறி, மீன், கடல்.

656. ஜல்ப: = பேச்சு, சொற்பொழிவு, உரையாடல், உளறுதல், வம்புப் பேச்சு, விவாதம், சொற்போர்.

657. ஜவ: = வேகம், சீக்கிரமாக நடப்பது.

658. ஜஸ் = விடுவிக்க, சுதந்திரமாக, அடிக்க, அடி கொடுக்க, அழிக்க, பொருட்படுத்தாதிருக்க, இழிவு படுத்த.

659. ஜஹாநக: = உலகப் பேரழிவு, மகா பிரளயம்.

660. ஜாகரணம் =விழித்து இருத்தல், தூக்கத்தில் இருந்து விழித்தல், எச்சரிக்கையாக இருத்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *