32. ஜடில to ஜம்பீ4ர:

621. ஜடில = சிக்கலான, குழப்பமான, அடர்த்தியான, உட்புகமுடியாத, தலையில் சடையுடைய.

622. ஜட2ரம் = வயிறு, வயிற்றுப் பகுதி, கருப்பை, ஒரு வஸ்துவின் உட்பகுதி.

623. ஜட2ராக்3னி = ஜீரணசக்தி, ஜீரண நீர், உணவுப்பையில் உள்ள அமில நீர்.

624. ஜட3 = குளிர்ந்த, சீதலமான, மந்தமான, மழுங்கிய, உணர்வற்ற, விவேகம் இல்லாத, அக்கரை இல்லாத.

625. ஜன: = ஜனதா = மனிதன், சமூகம், மக்கள். உலகம், வம்சம், இனம்.

626. ஜனனம் = பிறப்பு, சிருஷ்டி, தோற்றம், எழுச்சி, உதித்தல்.

627. ஜனக: = தந்தை, ஒரு புகழ் பெற்ற பண்டைய அரசன்.

628. ஜனனீ = தாய், தயை, கருணை, வௌவால், அரக்கு.

629. ஜனாந்த: = மக்கள் வசிக்காத இடம்.

630. ஜந்து = மிருகம், உயிருள்ள பிராணி, கீழ்ப்பட்ட இனம், நபர்.

631. ஜன்மன் = பிறப்பு, ஆரம்பம், மூலம், எழுச்சி, உற்பத்தி, படைப்பு, வாழ்க்கை, பிறப்பிடம்.

632. ஜன்மாந்தரம் = முற்பிறப்பு அல்லது மற்றோர் பிறப்பு.

633. ஜன்ம குண்ட3லி = ஜன்ம பத்ரிகா = குழந்தையின் ஜாதகக் குறிப்பு.

634. ஜன்ம ஸாபல்யம் = பிறவிப்பயன்.

635. ஜன்யம் = பிறந்தது, படைக்கப்பட்டது, விளைவு, உண்டானது.

636. ஜப: = மெல்லிய குரலில் செய்யப்படும் பிரார்தனை, வேதம் ஓதுதல், மந்திரங்களைச் சொல்லுதல்.

637. ஜபாகுஸுமம் = சிவப்புச் செம்பருத்திப்பூ.

638. ஜம்பதி = தம்பதிகள்.

639. ஜம்பூ3 = நாவல் மரம், நாவல் பழம்.

640. ஜம்பீ4ர: = எலுமிச்சை மரம், எலுமிச்சம் பழம்.

2 thoughts on “32. ஜடில to ஜம்பீ4ர:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *