581. சௌர்யம் = திருட்டு, கொள்ளை, ரஹசியம், மறைத்தல்.
582. ச்யவனம் = அசைதல், அடித்தல், வஞ்சித்தல், நஷ்டம், சேதம், மேலிருந்து கீழே விழுவது.
583. ச்யுத = கீழே விழுந்த, நழுவிய, வெளியேற்றப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, உடைக்கப் பட்ட.
584. ச2டா = கூட்டம், கட்டி, குவியல், காந்தி, வெளிச்சம், கிரணங்களின் கூட்டம்.
585. ச2த்ரின் = குடை பிடித்து நடப்பவன்.
586. ச2த்வர : = வீடு, கொடி வீடு, பர்ணசாலை.
587. ச2த3னம் = மூட உதவும் பொருள், சிறு துணி, போர்வை, வாளின் உறை, கூடு, மூடி.
588. ச2த்3மன் = மாறுவேடம், ஏமாற்றம் அளிக்கும் ஆடை, பொய்க்காரணம், நாணயமின்மை, தந்திரம்.
589. ச2ந்த3ஸ் = விருப்பம், ஆசை, நினைப்பு, மகிழ்ச்சி, இச்சை.
590. ச2மண்ட3: = திக்கற்றவன், யாரும் இல்லாதவன், அநாதை.
591. ச2ர்த3னம் = கக்குதல், வாந்தி எடுத்தல், ஆரோக்யமின்மை.
592. ச2லம் = ஏமாற்றுதல், வஞ்சித்தல், வெளிவேடம், கபடம்.
593. சா2த்ர: = மாணவன், சீடன்.
594. சா2ந்தஸ = விசே ஷ வேதச் சொற்கள், வேதத் தொடர்புள்ள.
595. சா2யா = நிழல், பிம்பம், பிரதி பிம்பம், ஒரு போலத் தோற்றம், ஒரு போல அமைப்பு, பிரமை, இருள், சூரியனின் மனைவி.
596. சா2யாங்க3: = சா2யாப்4ருத் = சா2யாமான: = சந்திரன்.
597. சா2யாக்3ரஹ: = கண்ணாடி, ராஹு, கேது.
598. சா2யாத்மாஜ: = சா2யாபுத்ர: = சா2யாஸுத: = சனி கிரகம் .
599. சா2யாபத2 = விண்வெளி, நக்ஷத்திர வீதி.
600. சா2யாதரு = சா2யாத்3ரும = நிழல் தரும் மரம்.