561. சும்ப்3 = முத்தமிட, மிருதுவாகத் தடவிக்கொடுக்க.
562. சும்ப3க: = முத்தமிடுபவன், காமவெறிகொண்டவன், போக்கிரி, மோசக்காரன், தராசின் முள்.
563. சுர் = கொள்ளை அடிக்க, திருட, எடுக்க, மேற்கொள்ள.
564. சுலுக: = ஆழமான சேறு, உள்ளங்கை, உள்ளங்கை அளவு நீர், சிறிய பாத்திரம்.
565. சூடா3 = தலை உச்சி மயிர், குடுமி, சேவல் அல்லது மயிலின் கொண்டை, மகுடம், கிரீடம், சிகரம்.
566. சூடா3மணி = தலையில் அணியப்படும் அணிகலன், மிகவும் உயர்ந்த ஒன்று.
567. சூர்ணம் = பொடி, மாவு, புழுதி, சந்தனம், வாசனைத்தூள், மருந்துப்பொடி.
568. சூர்ணகம் = ஒரு எளிய வசன நடை.
569. சேட: = சேட3: = வேலைக்காரன்.
570. சேடி = சேடி3 = சேடி4 = பணிப்பெண்.
571. சேதன = உயிருள்ள, உயிர் வாழும், அறிவுள்ள, உணர்வுள்ள, கண்ணுக்குப் புலப்படும்.
572. சேதஜன்மன் = சேதப4வ: = சேதபூ4: = மன்மதன்.
573. சேலம் = துணி, ஆடை.
574. சேஷ்டா = சேஷ்டிதம் =அசைவு, நடை, சமிக்ஞை, அறிகுறி, செயல், முயற்சி, உழைப்பு, நடத்தை.
575. சைதன்யம் = ஆன்மா, ஜீவன், உணர்வு, பிராணன், அறிவுத்திறன்
576. சைத்யம் = எல்லை காட்டும் கற்குவியல், சமாதி, யாக மண்டபம், கோவில், அத்தி மரம்.
577. சோடி = சிறிய பாவாடை, ரவிக்கை.
578. சோத்3யம் = ஆக்ஷேபித்தல், கேள்வி கேட்டல், ஆச்சர்யம், வியப்பு.
579. சோலி = சட்டை, ரவிக்கை, பாவாடை.
580. சோஷ்ய = உறிஞ்சி உண்ணக் கூடிய.