28. சித் to சுபு3கம்

541. சித் = எண்ணம், புத்தி கூர்மை, இதயம், மனம், ஆன்மா, ஜீவன், பிரமம்.

542. சித்தம் = பார்த்தல், கவனித்தல், எண்ணம், சிந்தனை, கவனம், மனம், புத்தி, பகுத்து அறியும் சக்தி.

543. சித்தப்ரச’ம: = மன அமைதி.

544. சித்தவிப்லவ: = மனக் குழப்பம், தடுமாற்றம், புத்தி மாறாட்டம், அறிவின்மை.

545. சித்த வருத்தி: = மனநிலை, மனதின் இயற்கை, உள்நோக்கு, மனக்கிளர்ச்சி, மனதின் உட்செயல்.

546. சித்ரம் = சித்திரம், ஓவியம், வரைபடம், ஆபரணம், அபூர்வ அழகு, திலகம், ஆகாயம், விண்ணுலகம்.

547. சித்ரகம்பளம் = பலவர்ண விரிப்பு, யானையின் மேல் போடப்படும் வர்ணத் துணி.

548. சித்ரகர: = ஓவியன், நடிகன், நாடகம் நடத்துபவன்.

549. சித்ரமேகல: = மயில்.

550. சித்ரபா4னு = அக்னி, சூரியன், பைரவர், எருக்கஞ்செடி, சிவன், ஒரு ஆண்டின் பெயர்.

551. சித்ரா = ஒரு நக்ஷத்திரம், மாயை.

552. சித்ரிணீ = புத்திசாலித்தனமும், பலவித மேன்மைகளும் பொருந்திய பெண்.

553. சிந்தனம் = ஆலோசித்தல், சிந்தித்தல், கவலைப்படுதல்.

554. சின்மயம் = பேரறிவு, பரமாத்மா.

555. சிராயுஸ் = நீண்ட ஆயுள்.

556. சிரஜீவன் = அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், ஹனுமான், விபீஷணன், மார்க்கண்டேயர் போன்ற சிரஞ்சீவிகள் .

557. சிஹ்னம் = அடையாளம், கரை, முத்திரை, குறி, ஜாடை, இங்கிதம், குறிக்கோள், திசை, ராசியின் சின்னம்.

558. சீரம் = கிழிந்த துணி, கந்தல் துணி, மரவுரி , நான்கு சர முத்து மாலை, கோடுகளைக் கொண்டு எழுதுதல்.

559. சீவரம் = துணி, ஆடை, மரவுரி, பௌத்த பிக்ஷுவின் ஆடை.

560. சுபு3கம் = முகவாய்க்கட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *