521. சரித்ரம் = நடத்தை, பழக்கம், செயல், காரியம், வாழ்க்கைக் குறிப்பு, வரலாறு, கதை.
522. சர்சா = உருப்போடுதல், ஸ்வரத்துடன் படித்தல், விவாதம், விசாரணை, சிந்தித்தல்.
523. சர்மன் = உடலின் தோல், தொடு உணர்ச்சி, கேடயம்.
524. சர்மகாரீன் = செருப்புத் தைப்பவன்.
525. சர்வணம் = தின்ன, சாப்பிட, ருசிக்க, ஆனந்தம் அடைய.
526. சல = நடுங்கும், துடிக்கும், நிலையற்ற, தீர்மானமற்ற, நிரந்தம் இல்லாத.
527. சலனம் = அசைவு, ஆட்டம், திரிதல், திரும்புதல், விடுதல்.
528. சக்ஷுஸ் = கண், பார்வை, தோற்றம், வெளிச்சம், பார்க்கும் திறன்.
529. சாஞ்சல்யம் = ஸ்திரமற்ற தன்மை, அநித்தியத் தன்மை, வேகமான நடை அல்லது இயக்கம்.
530. சாதுர்யம் = திறமை, சாமர்த்தியம், மதி நுட்பம், இனிய இயல்பு, அழகு.
531. சந்த்3ராயணம் = சந்திரனின் வளர்ச்சி அல்லது தேய்வுடன் தொடர்புள்ள ஒரு விரதம், அல்லது தவம்.
532. சாப: = வில், வானவில், வட்டப்பரிதியின் ஒரு பகுதி, தனுர் ராசி.
533. சாமரம் = கவரிமானின் வால் ரோமத்தால் செய்யப்பட ஒரு வித விசிறி.
534. சாம்பேயம் = நார், தாமரைத் தண்டினுள்ள நார், பொன்.
535. சாரண: = ஊர் சுற்றுபவன், யாத்திரிகன், ஒற்றன், பாடகன், நடிகன், நாட்டியக்காரன், விகடகவி, பாணன்.
536. சாருலோசன = அழகிய கண்களை உடைய.
537. சார்வாக = நாஸ்திக வாதத்தை விவரித்த ஒரு தத்துவவாதி.
538. சிகித்ஸா = சிகிச்சை, மருந்து கொடுத்தல், மருத்துவம் செய்தல்.
539. சிகீர்ஷா = செயல் புரிய ஆசை, விருப்பம், இச்சை.
540. சிகுர: = தலைமயிர், மலை, ஊர்வன, பாம்பு, ஒரு பக்ஷி, ஒரு மரம்.