26. சதுரச்’ர to சரிதம்

501. சதுரச்’ர = நாற்கோணம், சதுரம், நாற்கரம், நாற்கோட்டுருவம்.

502. சதுரானன: = பிரமன்.

503. சதுர்யுகம் = நான்கு யுகங்கள் சேர்ந்த காலம்.

504. சதுஷ்கம் = நான்கு என்ற எண், நாற்சந்தி, நான்கு மூலைகள் கொண்ட முற்றம், நாலு கால் மண்டபம்.

505. சதுஷ்டய = நான்கு மடங்கான, நான்குள்ள.

506. சந்த்3ரக: = சந்திரன், மயலின் தோகையில் உள்ள கண், விரல் நகம், வட்டமான உருவம்.

507. சந்த்ர பா3லா = பெரிய ஏலக்காய், நிலவு.

508. சந்த்3ரசி’லா = சந்திரகாந்தக்கல்.

509. சந்த்3ரகாந்தா = இரவு, சந்திரனின் மனைவி.

510. சந்த்3ரசூட3: = சந்த்3ரமௌலி: = சந்த்3ரசே’கர: = சிவபெருமான்.

511. சந்த்3ரஹாஸ: = பளபளப்பான பட்டாக் கத்தி, ராவணனின் போர்வாள்.

512. சந்த்3ரிகா = நிலவு, வெளிச்சம், பெரிய ஏலக்காய், மல்லிகைக் கொடி.

513. சபல = அசைகின்ற, ஆடுகின்ற, ஸ்திரமற்ற, சஞ்சலமான, சிந்தனையற்ற, விவேகம் இல்லாத.

514. சமத்கரணம் = ஆச்சரியப்படுத்துதல், வியப்புண்டாக்குதல், காப்பிய அழகு, திறமை.

515. சம்பகம் = சண்பகப்பூ.

516. சர = செல்லும், அசையும், ஆடும், நடுங்கும், உயிருள்ள.

517. சரணம் = பாதம், முட்டு, தூண், வேர், செய்யுளின் ஒரு அடி, கால் பங்கு, வம்சம், வேதசாகை.

518. சரணாம்ருதம் = ஆத்யாத்மிக குருவின் பாதங்களைக் கழுவிய நீர்.

519. சரண ஸேவா = சாஷ்டாங்க நமஸ்காரம்.

520. சரிதம் = செல்லுதல், நடைபாதை, செயல், அப்யாசம், நடத்தை, காரியம், கதை, சரித்திரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *