25. க4ன to சதுரங்கம்

481. க4ன = கச்சிதமான, திடமான, கெட்டியான, கனமான, அடர்ந்த, ஆழ்ந்த, பெரிய, சுபமான.

482. க4னாக4ன: = இந்திரன், மழைமேகம், மதம் கொண்ட யானை.

483. க4ர்ம: =உஷ்ணம், வெப்பம், வியர்வை, நீரைச் சூடாக்கும் பாத்திரம்.

484. கா4துக = அடிக்கும், துன்புறுத்தும், கொடிய, கொடூரமான.

485. கா4ஸ: = புல், உணவு.

486. க்4ருதம் = நெய், தண்ணீர், சக்தி.

487. கோ4ர = பயங்கரமான, துன்பம் தரும், பயம் தரும்.

488. கோ4ஷ: = பேரிரைச்சல், சச்சரவு, கர்ஜனை, வதந்தி, புரளி, அதிகார பூர்வமான அறிக்கை,

489. கோ4ஷணம் = அறிவிப்பு, சத்தமாகச் சொல்லுதல், தமுக்கு போடுதல்.

490. க்4ராணம் = வாசனை, மூக்கு, வாசனை பார்த்தல்.

491. ச: = சந்திரன், ஆமை, திருடன்.

492. சக்ரம் = வண்டிச் சக்கரம், குயவனின் திரிகை, விஷ்ணுவின் சக்ராயுதம், செக்கு, கூட்டம், ராஜ்ஜியம், பிரதேசம், காலச் சக்கரம்.

493. சக்ர பாத3: = யானை, வண்டி.

494. சக்ரின் = விஷ்ணு, குயவன், வாணியன், கழுதை, உளவாளி, பாம்பு, காக்கை, பேரரசன், சக்கரவாகப் பறவை.

495. சஞ்சல = அசைகின்ற, ஆடுகின்ற, ஸ்திரமற்ற.

496. சஞ்சலா = மின்னல், லக்ஷ்மி தேவி.

497. சணக: = கொத்துக் கடலை.

498. சண்ட3= குரூரமான, மிருகத்தனமான, கோபம்கொண்ட, சூடான, தீவிரமான, கூர்மையான.

499. சண்டா3ள: = கலப்பு ஜாதியைச் சேர்ந்தவன்.

500. சதுரங்கம் = யானை, தேர், குதிரை, காலாட்களைக் கொண்ட சேனை, ஒரு சொக்காட்டான் ஆட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *