24. க்3ரத2னம் to க4ண்டா

461. க்3ரத2னம் = கெட்டிப்படுதல், தடித்துப் போதல்.

462. க்3ரந்த: = கட்டுதல், இயற்றுதல், புத்தகம், செல்வம் சொத்து,

463. க்3ரந்தி: = முடிச்சு, கொத்து, பணப்பையின் முடிச்சு, மூட்டு.

463. க்3ரந்தி2ன் = புத்தகப்புழு, வித்வான், அறிவாளி.

465. க்3ரஹணம் = பிடித்தல், அடைதல், ஏற்றல், வாங்குதல், கை.

466. க்3ரஹபீட3னம் = கோள்களால் ஏற்படும் துன்பம்.

467. க்3ரஹ சா’ந்தி = ஹோமம், ஜபம், பூஜை செய்து கோள்களின் துன்பத்திலிருந்து விடுபடுதல்.

468. கிராம: = கிராமம், வம்சம், இனம், ஜாதி, கூட்டம், சேர்க்கை.

469. க்3ராமணி = கிராமத் தலைவன், நாவிதன், காமம் பிடித்தவன்.

470. க்3ராம்ய = பட்டிக்காட்டுத்தனமான, பண்பற்ற.

471. க்3ராஹ்யம் = வெகுமதி, நன்கொடை.

472. க்3ரீவா = கழுத்து, கழுத்தின் பின்புறம்.

473. க்3ரீஷ்ம = கோடைக்காலம், உஷ்ணமான காலம்.

474. க்3ளானி: = களைப்பு, சோர்வு, அழிவு, வலிமையின்மை.

475. க4: = மணி, கடகட , கலகல, களகள போன்ற ஒலிகள்.

476. க4ட: = மண் பானை, குடம், ஜாடி, யானையின் மத்தகம், தூணின் ஒரு பகுதி.

477. க4டகார: = குயவன்.

478. க4டனம் = உழைப்பு, முயற்சி, நிகழ்தல், ஏற்படுதல், கூடுதல், ஓரிடத்தில் சேருதல்.

479. க4டிகா = சிறு குடம், மண் கலயம், ஒரு நாழிகை = 24 நிமிஷங்கள், கணுக்கால்.

480. க4ண்டா = மணி, மணியை அறிவிக்க அடிக்கும் கனத்த இரும்பு அல்லது வெண்கலத்தகடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *