23. குரு: to கௌ3ரீ

441. குரு: = ஆசிரியர், மதகுரு, தந்தை, வயதானவர், பூஜிக்கத் தக்கவர், எஜமானன், தலைவன், அரசன்.

442. கு3ல்மம் = தோப்பு, காடு, புதர், கோட்டை, சாவடி.

443. குஹ்யம் = ரகசியம், மறைக்கப்படுவது.

444. க்3ருத்ஸ = கெட்டிக்கார, சாமர்த்தியமுள்ள, கூர்மையான அறிவுள்ள.

445. க்3ருஹம் = வீடு, இருப்பிடம், மாளிகை, இல்லற வாழ்க்கை.

446. க்3ருஹீத = எடுத்துக்கொள்ளப் பட்ட, பிடிக்கப்பட்ட, பறிக்கப்பட்ட.

447. கே3யம் = பாட்டு.

448. கே3ஹம் = வீடு, இருப்பிடம்.

449. கோ3 = கால்நடைகள், நட்சத்திரங்கள், ஆகாயம், வச்சிராயுதம், வைரம், சுவர்க்கம், அம்பு.

450. கோ3கர்ண: = பசுவின் காது, கோவேறு கழுதை, பாம்பு, அம்பு.

451. கோ3குலம் = பசுக்களின் கூட்டம், கோசாலை, கண்ணனின் கிராமம்.

452. கோ3ணி = கோணி, சாக்கு, கந்தல் துணி.

453. கோ3பதி = தலைவன், சூரியன், இந்திரன், சிவன், கிருஷ்ணன்.

454. கோ3புரம் = நகரத்தின் நுழைவாயில், கோவில் கோபுரம்.

455. கோ3மயம் = பசுவின் சாணம்.

456. கோ3ரோசனா = பசுவிடம் கிடைக்குமொரு வாசனை மருந்துப் பொருள்.

457. கோ3ஷ்டீ2 = சபை, கழகம், கூட்டம், சேர்க்கை, உறவினர்.

458. கௌ3ர = வெள்ளி நிறம், மஞ்சள் நிறம், சிவப்பு நிறம், வெள்ளைக் கடுகு, சந்திரன், ஒரு வகை மான், ஒருவகை எருமைக்கடா.

459. கௌ3ரவம் = பளு, கனம், மேன்மை, மரியாதை, உயர்ந்த விலை.

460. கௌ3ரீ = பார்வதி, எட்டு வயதுப் பெண், கன்னிப்பெண், குமாரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *