22. க3ர்ஹணம் to கு3ப்த

421. க3ர்ஹணம் = நிந்தித்தல், திட்டுதல், மாசு கற்பித்தல்.

422. க3வ்யம் = கால்நடைகளின் மந்தை, பசுக்கூட்டம்.

423. க3ஹனம் = ஆழம், காடு, புதர், குகை, பீடை, துக்கம்.

424. கா3ட4ம் = பலமாக, அதிகமாக, பூரணமாக, தீவிரமாக.

425. கா3ணாபத்யம் = விநாயகர் வழிபாட்டை முக்கியமாகக் கொண்ட மதம், படைத் தலைமை.

426. கா3த்ரம் = உடல், அவயவம், உடலின் ஒரு பகுதி.

427. கா3ம்பீ4ர்யம் = ஆழம், மேன்மை, பெருமை, தாராள மனப் பான்மை, அமைதியுடமை.

428. கா3யக: = பாடகன், இசை அறிவு உடையவன்.

429. கா3லி: = வசை, திட்டு.

430. கி3ரி: = குன்று, மலை, மேடு, ஏற்றம், பந்து, கண் நோய்.

431. கி3ரிஜா = பார்வதி, மல்லிகைக் கொடி, கங்கை நதி.

432. கி3ரிச’: = சிவபிரான்.

433. கீ3ர்ணி: = புகழ், கீர்த்தி, சாப்பிடுதல், விழுங்குதல்.

434. கு3க்3கு3லு: = குங்கிலியம், சாம்பிராணி.

435. கு3ச்ச2: = கொத்து, பூங்கொத்து, மயில் தோகை, முத்துமாலை.

436. கு3ட3: = சக்கரைப்பாகு, வெல்லப்பாகு, வெல்லக்கட்டி, பந்து.

437. கு3ண: = ஸ்வபாவம், குணம், சிறப்பு, மேன்மை, லாபம், பயன்.

438. கு3ணநிதி4 = குணங்களின் இருப்பிடம்.

439. கு3ணவைசே’ஷ்யம் = குணப் பெருமை.

440. கு3ப்த = மறைக்கப்பட்ட, காக்கப்பட்ட, மூடப்பட்ட, ரகசியமான.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *