401. கு2ர: = விலங்குகளின் குளம்பு, கட்டில் கால், சவரக்கத்தி, ஒரு வகை வாசனைப் பொருள்.
402. கே2லனம் = விளையாட்டு, பொழுது போக்கு.
403. க்2யாதி = புகழ், கீர்த்தி, பெயர், பட்டம், விருது, துதி.
404. க்2யாபனம் = பிரகடனம், ஒப்புக் கொள்ளுதல், பிரசுரித்தல்.
405. க3: = கந்தர்வன், விநாயகருக்கு அடைமொழி.
406. க3க3னம் = ஆகாயம், விண்வெளி, பூஜ்யம், சுவர்க்கம்.
407. க3ங்கா3புத்ர: = பீஷ்மர், முருகக் கடவுள்.
408. க3ண: = மந்தை, கூட்டம், வர்க்கம், குவியல், வரிசை, வகுப்பு, சிவபிரானின் தொண்டர் கூட்டம், சமாஜம், சபை.
409. க3ண்ட: = கன்னம், யானையின் பொட்டு, குமிழி, கொப்பளம், கட்டி, வீரன், ஆபத்து, மூட்டு, காண்டாமிருகம்.
410. க3த = சென்ற, கழிந்த, முடிந்துபோன, அடங்கிய, விழுந்த.
411. க3தி: = நடை, செல்லல், போதல், நுழைவு, திருப்பம், திசை, அடைதல், தலைவிதி, தசை, நிலை, பயன்.
412. க3த்3க3த3ம் = நாத்தழுதழுத்தல், நடுங்கிய பேச்சு, திக்கிய பேச்சு, தழுதழுத்த பேச்சு.
413. க3த்3யம் = உரைநடை, வசன வியாசம்.
414. க3ந்த4: = மணம், வாசனை, பிருத்வீ, சேர்க்கை, தொடர்பு, கர்வம், மமதை.
415. க3ப4ஸ்தி: = சூரியன், ஸ்வாஹாதேவி.
416. க3மனம் = நடை, அசைவு, அனுபவித்தல், அடைதல், பழகுதல்.
417. க3மனீய = எளிதில் அடையக்கூடிய, அறிந்துகொள்ளக் கூடிய.
418. க3ரளம் = விஷம், பாம்பின் விஷம், புல் கட்டு.
419. க3ர்ஜனம் = கர்ஜனை, இடி, சப்தம், ஆவேசம், கோபம், வசை.
420. க3ர்த3ப4ம் = வெண்ணிற அல்லி.