201. க்ஷீரஜா to க்ஷ்வேலீ

4001. க்ஷீரஜா = க்ஷீரதனயா = லக்ஷ்மி தேவி.

4002. க்ஷீராப்3தி4: = பாற்கடல்.

4003. க்ஷுதா = க்ஷுதம் = தும்மல்.

4004. க்ஷுத்3ர = அற்பமான, குறைவான, ஏழ்மையான, எளிய, குரூரமான, லோபியான.

4005. க்ஷுத்3ரா = தேனீ, வேசி.

4006. க்ஷுப்3த4 = சஞ்சலமான, ஸ்திரமற்ற, பயந்த.

4007. க்ஷுர : = குதிரையின்/ பசுவின் குளம்பு, அம்பு, சவரக்கத்தி.

4008. க்ஷேத்ரம் = நிலம், வயல், இடம், வீடு, புண்ணியத் தலம், பிறப்பிடம், உடல், மனம், நகரம்.

4009. க்ஷேத்ரஞ : = ஆன்மா, பரம்பொருள், குடியானவன்.

4010. க்ஷேத்ரக3ணிதம் = ஜியோமிதி.(geometry)

4011. க்ஷேத்ரீன் = குடியானவன்.

4012. க்ஷேப: = க்ஷேபணம் = எறிதல், போடுதல், அனுப்புதல், தாமதித்தல், அவமதித்தல், கர்வம்.

4013. க்ஷேமம் = க்ஷேம: = சௌக்கியம், சுகம், அமைதி, களிப்பு, மோக்ஷம்.

4014. க்ஷௌமம் = க்ஷௌம: = பட்டு வேஷ்டி, கம்பளித் துணி.

4015. க்ஷௌரம் = சவரம் செய்து கொள்ளுதல்.

4016. க்ஷ்மா = பூமி, எண் ஒன்று.

4017. க்ஷ்மாபதி: = க்ஷ்மாப: = க்ஷ்மாபு4ஜ் = அரசன்.

4018. க்ஷ்வேட3: = சப்தம், கோலாஹலம், விஷம், நனைந்து போதல்.

4019. க்ஷ்வேலா = கேலி, விளையாட்டு.

4020. க்ஷ்வேலீ = பரிகாசம், கேலி, விளையாட்டு.

3 thoughts on “201. க்ஷீரஜா to க்ஷ்வேலீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *