381. கௌசே’யம் = பட்டு, பட்டுத்துணி.
382. க்ரந்த3னம் = அழுகை, அழுகுரல், அழைத்தல்.
383. க்ரம: = கால், காலடி, பாதம், நாடி, செல்லல், செய்தல், ஆரம்பம்.
384. க்ரியா = செய்தல், கார்யம், வேலை, தொழில், உழைப்பு.
385. க்ரீடா3 = விளையாட்டுப் போட்டி, பொழுதுபோக்கு, களிப்பு, கேலி.
386. க்ரூர = தயை அற்ற, கடுமையான, கடினமான, பயங்கரமான.
387. க்ரோத4: = கோபம், சினம், சீற்றம்.
388. க்ளிஷ்ட = வாடிய, துன்புற்ற, ஒவ்வாத, முரணான.
389. க்ளைப்3யம் = பேடித்தனம், ஆண்மை இன்மை, சக்தியற்ற.
390. க்வணிதம் = ஒலி, சப்தம், சங்கீத வாத்ய ஒலி.
391. க2ம் = ஆகாயம், சுவர்க்கம், ஐம்புலன்கள், வயல், பூஜ்ஜியம், புள்ளி, தொளை, பொந்து, துவாரம்.
392. க2ட்வாங்கி3ன் = சிவபிரான்.
393. க2ண்ட3ம் = பிளவு, இடைவெளி, வெடிப்பு, உடைதல், சமூகம்.
394. க2ண்ட3னம் = துண்டித்தல், வெட்டுதல், காயப்படுத்துதல்.
395. க2னி = சுரங்கம், குகை.
396. க2ர = கடினமான, முரடான, உறுதியான, கூர்மையான,கொடூரமான, உக்கிரமான.
397. க2ர்ஜூரம் = பேரிச்சம்பழம்.
398. க2லம் = பூமி, நிலம், மண் குவியல், கசண்டு.
399. கா2ண்ட3வ: = கற்கண்டு.
400. கா2த்3யம் = உணவு, உணவுப்பண்டம்.