2. அனில: to அம்ருதம்

21. அனில: = காற்று, வாயு தேவன், உடலில் உள்ள வாயு, வாத நோய், ஸ்வாதிநட்சத்திரம்.

22. அநிஷ்டம் = துரதிருஷ்டம், விபத்து.

23. அனுப3ந்த4ம் = கட்டுதல், பயன், சேர்த்தல், தொடர்பு.

24. அனுமானம் = ஊகம், உவமை, சம்ஸ்கிருத பாஷையின் ஒரு அலங்கார வகை.

25. அனுராக3ம் = அன்பு, பக்தி, பாசம், சிவப்புத் தன்மை.

26. அனுஷ்டானம் = கார்யம் செய்தல், செயல்முறை, மத சம்பந்தமான செயல்கள்.

27. அந்தம் = முடிவு, எல்லை, சாவு, அழிவு, ஒரு சொல்லின் கடைசிப் பகுதி.

28. அபசாரம் = தவறு இழைத்தல், குற்றம்.

29. அபாத்ரம் = தகுதி அற்ற மனிதன், தானம் பெற தகுதி இல்லாதவன்.

30. அபாரம் = கரை இல்லாத, எல்லை இல்லாத, கடக்க முடியாத, மிகவும் அதிகமான.

31. அபூர்வம் = புதிய, வினோதமான, ஒப்பற்ற, இதற்குமுன் கண்டிராத.

32. அபேக்ஷை = விருப்பம், தேவை, அவசியம், ஆலோசனை, தொடர்பு , கவனம்.

33. அபி4ஜன: = குடும்பம், வம்சம், பிறப்பிடம், தாய்நாடு, புகழ்.

34. அபி4ஜித் = விஷ்ணு, ஒரு நட்சத்திரத்தின் பெயர், சோம யாகம்.

35. அபி4நந்த3னம் = மகிழ்ச்சி அடைதல், நமஸ்கரித்தல், வரவேற்றல், விருப்பம்.

36. அபி4நவ = முற்றிலும் புதுமையான, மிகவும் இளமையான.

37. அபி4மானம் = பெருமை(கர்வம் அல்ல), தன்மானம், எண்ணம், பிரியம், நேசம், ஆசை.

38. அபி4லாஷை = விருப்பம், பற்றுதல், காதல்.

39. அபி4வாதனம் = பெரியவர்களை வணங்குதல்.

40. அம்ருதம் = அழிவின்மை, மோக்ஷம், சுவர்க்கம், ஜலம், யாகசேஷம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *