197. ஹா to ஹிரண்மய

3921. ஹா = சோகம், துக்கம், சினம், ஆச்சரியம் ஆகிய உணர்ச்சிகளைத் தெரிவிக்கும் சொல்.

3922. ஹானி: = கேடு, நஷ்டம், சேதம், தியாகம், குறைவு, பயன் அற்றது, இல்லாமை.

3923. ஹார: = முத்து மலை, மாலை, எடுத்துச் செல்ல, அபகரித்தல், சுமந்து செல்லுதல்.

3924. ஹாரக: = திருடன், தீயவன்.

3925. ஹார்த3ம் = பாசம், நேசம், பிரியம், நட்பு, அர்த்தம், போறும், அபிப்பிராயம்.

3926. ஹார்ய = அடையத் தக்க, வசீகரிக்கத் தக்க, அபஹரிக்கத் தக்க.

3927. ஹால: = கலப்பி, பலராமனின் ஒரு பெயர்.

3928. ஹாலாஹலம் = பாற்கடலில் தோன்றிய கொடிய விஷம்.

3929. ஹாஸ: = சிரிப்பு, மகிழ்ச்சி, சந்தோஷம், பரிகாசம், ஒரு காவியச் சுவை.

3930. ஹாஸ்யம் = சிரிப்பு, மகிழ்ச்சி, சந்தோஷம், பரிகாசம்.

3931. ஹாஸ்ய: = ஒரு காவியச் சுவை.

3932. ஹி = மாத்திரம், ஆகையால்.

3933. ஹிங்கு3 = பெருங்காய மரம், பெருங்காயம்.

3934. ஹித = உசிதமான, பொருத்தமான, உபயோகமான, நன்மையான சரியான, வைக்கப்பட்ட, எடுக்கப்பட்ட.

3935. ஹிந்தோ3ள: = ஊஞ்சல், தொட்டில், ஒரு ராகம்.

3936. ஹிம: = குளிர்காலம், இமயமலை, சந்திரன்.

3937. ஹிமம் = பணி, மூடுபனி, குளிர், குளிர்ச்சி, இரவு, முத்து, சந்தனக் கட்டை, புதிய வெண்ணை.

3938. ஹிமவத் = ஹிமவான் = ஹிமாசல: = ஹிமாத்3ரி = ஹிமாலய = இமயமலை.

3939. ஹிமானீ = பனிக்குவியல்.

3940. ஹிரண்மய = பொன்மயமான, பொன்னால் செய்யப்பட்ட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *