196. ஹனு: to ஹஸ்தினி

3901. ஹனு: = ஹனூ = முகவாய்கட்டை, தாடை.

3902. ஹந்த = உணர்சிகளை வெளிப்படுத்தும் ஒரு சொல் (மகிழ்ச்சி, தயை, துக்கம், ஆச்சரியம் போன்றவைகளை.)

3903. ஹய: = குதிரை.

3904. ஹர: = சிவன், அக்னி, ஒரு பின்னத்தின் கீழ்ப்பகுதி,

3905. ஹரணம் = பிடித்தல், நீக்குதல், எடுத்துச் செலுத்தல், கை, புயம், தங்கம், வீர்யம்.

3906. ஹரி: = விஷ்ணு, இந்திரன், பிரமன், அக்னி, சிங்கம், குரங்கு, குதிரை, பாம்பு, தவளை, கிளி, மயில்.

3907. ஹரிண: = மான், வெண்மை நிறம், சிவன், விஷ்ணு, சூரியன், அன்னப்பக்ஷி.

3908. ஹரிணீ = பெண் மான், ஜவந்தி, தங்க விக்ரஹம்.

3909. ஹரித் = ஹரித = பச்சை நிறமான.

3910. ஹரித்3ரா = மஞ்சள் கிழங்கு.

3911. ஹர்ம்யம் = அரண்மனை, அடுப்பு, மாளிகை.

3912. ஹர்ஷ: = மகிழ்ச்சி, சந்தோஷம், மயிர்க்கூச்சல்.

3913. ஹல: = ஹலம் = கலப்பை.

3914. ஹலா = தோழி, பூமி, சாராயம், தண்ணீர்.

3915. ஹவ: = ஹவனம் = ஹோமம், பிரார்த்தனை, கூப்பிடுதல், அக்னியில் அர்ப்பணித்தல்.

3916. ஹவிஷ்யம் = ஹவிஸ் = ஆஹூதி செய்யத் தக்க பொருள், நெய், நெய்யுடன் சேர்ந்த அன்னம்.

3917. ஹஸ் = புன்சிரிக்க, சிரிக்க, மலர, புஷ்பிக்க, பிரகாசிக்க, பரிகசிக்க.

3918. ஹஸ்த: = கை, யானை துதிக்கை, ஹஸ்த நட்சத்திரம், கையொப்பம், கூட்டம், உதவி, முழம்.

3919. ஹஸ்தின் = யானை.

3920. ஹஸ்தினி = பெண்யானை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *