195. ஸ்வஸா to ஹன்

3881. ஸ்வஸா = ஸ்வஸ்ரூ = தங்கை / தமக்கை.

3882. ஸ்வஸ்தி = மங்களம், க்ஷேமம், ஜெயம்.

3883. ஸ்வஸ்திக: = மங்கலச் சின்னம், நாற்சந்தி.

3884. ஸ்வாக3தம் = நல்வரவு.

3885. ஸ்வாதந்த்ரயம் = தன்னிச்சை, சுதந்திரம்.

3886. ஸ்வாதி: = ஸ்வாதீ = கத்தி, பட்டாக்கத்தி, சுவாதி நட்சத்திரம்.

3887. ஸ்வாத3: = ஸ்வாத3னம் = சுவை, ருசி, குடித்தல்.

3888. ஸ்வாது3 = சுவையுள்ள, இனிப்பான.

3889. ஸ்வாப: = தூக்கம், கனவு.

3890. ஸ்வாமின: = உடையவன், சொந்தக்காரன், அரசன், பிரபு, கணவன், குரு, கற்றறிந்தவன், முருகன், சிவன்,விஷ்ணு

3891. ஸ்வாரஸ்யம் = சுவை, அழகு, தகுதி.

3892. ஸ்வராஜ்யம் = தன்னிச்சையான ஒளியுடன் விளங்கும்.

3893. ஸ்வாஹா = அக்னியின் மனைவி, அக்னியில் பொருட்களை அர்ப்பணிக்கும்போது கூறும் மந்திரம்.

3894. ஸ்வீகரணம் = ஸ்வீகார: = ஸ்வீக்ருதி = ஏற்றுக்கொள்ளுதல், எடுத்துக்கொள்ளுதல்.

3895. ஸ்வேத3: = வியர்வை.

3896. ஹட்ட: = சந்தை, கடை வீதி.

3897. ஹட2: = பலாத்காரம், பிடிவாதம், கடுமை, ஒரு யோகாப்பியாசம்.

3898. ஹத = அபஹரிக்கப்பட்ட, கொல்லப்பட்ட, அடிக்கப்பட்ட, சேதம் செய்யப்பட்ட.

3899. ஹதி: = ஹத்யா = கொலை, அடித்தல், அழிவு, காயப்படுத்துதல்.

3900. ஹன் = கொல்ல, அடிக்க, காயப்படுத்த, தடுக்க, தோற்கடிக்க, இடையூறு செய்ய, சேதம் விளைவிக்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *