3841. ஸ்நிக்3த4 = பசையுள்ள, எண்ணை பசையுள்ள, நட்புள்ள, சிநேகமான, மிருதுவான, பிரியமான, பளபளப்பான, அடர்த்தியான, தயையுடன் கூடிய.
3842. ஸ்நிக்3த4: = நண்பன், தோழன்.
3843. ஸ்னுஷா = மகனின் மனைவி, மருமகள்.
3844. ஸ்னேஹ: = பாசம், நட்பு, அன்பு, எண்ணெய், பசை, கொழுப்பு.
3845. ஸ்னேஹித: = நண்பன்.
3846. ஸ்பந்த3: = ஸ்பந்த3னம் = துடிப்பு, நடுக்கம், நாடித்துடிப்பு.
3847. ஸ்பர்தா4 = போட்டி, பொறாமை, பந்தயம்.
3848. ஸ்பர்ச’: = தொடுதல், தொடர்பு, காற்று, தானம், நன்கொடை, ஆகாயம்.
3849. ஸ்பஷ்ட = தெளிவான, விளக்கமாக, உள்ளபடி.
3850. ஸ்ப்ருஹா = விருப்பம், ஆசை.
3851. ஸ்படிக: = பளிங்கு, படிகம்.
3852. ஸ்பீத = பெருத்த, பருத்த, கொழுத்த, வீங்கின, அதிகமான.
3853. ஸ்புட = உடைந்த, திறந்த, மலர்ந்த, உண்மையான, வெண்மையான, புகழ் வாய்ந்த, தெளிவாக்கப்பட்ட.
3854. ஸ்பூர்தி: = துடிப்பு, மலர்ச்சி, தாவுதல், பாய்ச்சல்.
3855. ஸ்போட: = வெடிப்பு, கட்டி, கொப்புளம், ஒரு சொல்லைக் கேட்டதும் தோன்றும் அர்த்தம்.
3856. ஸ்மய: = ஆச்சரியம், வியப்பு, கர்வம்.
3857. ஸ்மர: = நினைவு, ஞாபகம், காதல், மன்மதன்.
3858. ஸ்மரணம் = ஞாபகம், நினைவு, சிந்தித்தல்.
3859. ஸ்மித = புன்சிரிப்புடன் கூடிய, மலர்ந்த.
3860. ஸ்ம்ருதி: = நினவு, சிந்தித்தல், தர்ம சாஸ்திரம்.