192. ஸ்தேயம் to ஸ்நாயு:

3821. ஸ்தேயம் = ஸ்தைன்யம் = திருட்டு, கொள்ளை.

3822. ஸ்தோமம் = தலை, செல்வம், தான்யம்.

3823. ஸ்தோம: = துதி, எண்ணிக்கை, யாகம், சேர்க்கை, கூட்டம்.

3824. ஸ்திரீ = பெண், மனைவி.

3825. ஸ்தா2கி3த = ரகசியமாக வைக்கப்பட்ட, மறைக்கப்பட்ட.

3826. ஸ்த2பதி: = சில்பி, தேர்ப்பாகன், தச்சன், தலைவன், அரசன், குபேரன்.

3827. ஸ்த2லம் = இடம்,பூமி, நிலம், விஷயம், பகுதி, பாகம்.

3828. ஸ்தா2 = நிற்க, இருக்க, தங்க, வசிக்க, உயிர் வாழ.

3829. ஸ்தா2னம் = நிற்பது, இருப்பது, தங்குவது, வீடு, இடம், தொடர்பு, பதவி.

3830. ஸ்தா2னே = சரியான இடத்தில், ஒன்றிற்கு பதிலாக, ஒன்றிற்காக, இம்மாதிரியாக.

3831. ஸ்தா2பனம் = ஸ்தாபித்தல், வைத்தல், கெட்டிப்படுதல்.

3832. ஸ்தா2லீ = பானை, சிறு பாத்திரம்.

3833. ஸ்தா2வர: = அசைவற்ற, உணர்வற்ற, மலை.

3834. ஸ்தி2த = நின்ற, இருந்த, தங்கிய, ஸ்திரமான.

3835. ஸ்தி2தி: = வாழ்வு, இடம், நிலை, நிலைமை, ஓய்வு, எல்லை, காப்பாற்றி வைத்தல், ஸ்திரத்தன்மை.

3836. ஸ்தி2ர: = உறுதியான, நிரந்தரமான, நிலையான, நிச்சயமான, கடினமான, அசைவற்ற, அமைதியான.

3837. ஸ்தூ2ல = பெரிய, பருத்த, கொழுத்த, எளிமையான.

3838. ஸ்தை2ர்யம் = பொறுமை, திடத்தன்மை, ஸ்திரத் தன்மை, அசைவற்ற தன்மை.

3839. ஸ்நானம் = நீராடுதல், கழுவுதல்.

3840. ஸ்நாயு: = ஸ்நாவ: = நரம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *