3801. ஸம்ஸ்தா2 = சபை, குழு, வேலை, தொழில், இயற்கை, தோற்றம், நிலை, முடிவு, நிறுத்தம், இடைவேளை, பிரளயம்.
3802. ஸம்ஸ்தா2னம் = நிர்மாணித்தல், பொது இடம், அருகாமை, குவியல், கூட்டம், உருவம், தூரம், நாற்சந்தி, பாகம், அம்சம், ராஜ்ஜியம்.
3803. ஸம்ஸ்தாபனம் = ஸ்தாபித்தல், சேர்த்தல், திடமாக்குதல், தீர்மானித்தல், பொருத்துதல்.
3804. ஸம்ஸ்தி2த = குவிக்கப்பட்ட, ஸ்தாபிக்கப்பட்ட, முடிவு பெற்ற, சேர்க்கப்பட்ட.
3805. ஸம்ஸ்தி2தி: = இருப்பிடம், குவியல், கூட்டம், அருகாமை, நிலைமை.
3806. ஸம்ஹ்ருதி = உடல், வலிமை, சேர்க்கை, கூட்டம்.
3807. ஸம்ஸ்ம்ருதி: = ஞாபகம், நினைவு.
3808. ஸம்ஹார: = அழிவு, பிரளயம், அடித்தல், முடிவு, தடை.
3809. ஸம்ஹிதா = வேதமந்திரத்தின் பகுதி, கலப்பு, சேர்க்கை.
3810. ஸ்கந்த3: = முருகன், சிவன், அரசன், திறமை உள்ளவன், பாதரசம், தாவுதல்.
3811. ஸ்கந்த4: = தோள், உடல், அடிமரம், கிளை, பகுதி, புத்தகத்தின் அத்யாயம்.
3812. ஸ்கலனம் = கீழே விழுதல், தடுமாறுதல், நழுவுதல், வழி தப்புதல், பிழை, திக்கியபேச்சு, தவறான உச்சரிப்பு.
3813. ஸ்கலித = கீழே விழுந்த, தடுமாறிய, திடமற்ற, தப்புசெய்த, பரபரப்பு அடைந்த.
3814. ஸ்தன: = பெண்களின் ஸ்தனம்.
3815. ஸ்தப3க: = கொத்து, அத்யாயம்.
3816. ஸ்தப்3த4 = அசைவற்ற, உணர்ச்சியற்ற, திடமான.
3817. ஸ்தம்ப4: = தூண், கம்பம், உறுதி, முட்டு, தடை, அடக்கம், அறியாமை, உணர்ச்சி இன்மை.
3818. ஸ்தம்ப4னம் = நிறுத்துதல், தடுத்தல், அமைதி / உறுதி ஆக்குதல்,
3819. ஸ்தவ: = ஸ்தாவ: = ஸ்தவனம் = ஸ்தோத்ரம் = ஸ்துதி: = துதி, துதித்தல், புகழுதல், புகழும் பாடல்.
3820. ஸ்தேன: = திருடன்.