3761. ஸௌகர்யம் = எளிதில் செய்யக் கூடியது, திறமை.
3762. ஸௌஜன்யம் = நல்ல தன்மை, தயை, பிரியம், நட்பு.
3763. ஸௌதா3மினி = சௌதா3மினீ = மின்னல்.
3764. ஸௌந்த3ர்யம் = அழகு.
3765. ஸௌப4க3ம் = அதிர்ஷ்டம், செல்வம் செழிப்பு.
3766. ஸௌபா4க்யம் = அழகு, மங்களம், சுபம்.
3767. ஸௌமனஸ = மனதிற்கு இனிமையான, புஷ்பங்களைச் சார்ந்த.
3768. ஸௌம்ய = அழகான, இன்பமான, மிருதுவான, சுகம் தரும், நிலவுடன் தொடர்புள்ள.
3769. ஸௌரப4ம் = குங்குமப்பூ, நல்ல மணம்.
3770. ஸௌரி: = சனீஸ்வரன், யமன்.
3771. ஸௌலப்4யம் = எளிமை.
3772. ஸௌஷ்டவம் = அழகு, சிறப்பு, திறமை.
3773. ஸௌஹார்த3ம் = ஸௌஹார்த்3யம் = ஸௌஹ்ருத3ம் = நட்பு, அன்பு.
3774. ஸௌஹித்யம் = அதிக திருப்தி, தெவிட்டுதல், மகிழ்ச்சி, முழுமை, அன்பு, சினேஹம்.
3775. ஸம்யம : = புலன்களை அடக்குதல், மனத்தைக் கட்டுப்படுத்துதல், தயாள குணம், முயற்சி.
3776. ஸம்யமின் = துறவி, முனிவன், புலன்களை அடக்கியவன்.
3777. ஸம்யுக்த = ஸம்யுத = கலந்த, சேர்ந்த, கூடவுள்ள, பிணைக்கப்பட்ட.
3778. ஸம்யுக3: = சேர்க்கை, கலத்தல், சண்டை, போர்.
3779. ஸம்யோக3: = சேர்க்கை, சந்தித்தல், ஒன்று கூடுதல், கூட்டுதல், கோவை, வரிசை.
3780. ஸம்யோஜனம் = ஒன்றுகூடுதல், புணர்ச்சி, ஓரிடத்தில் சேருதல்.