188. ஸூந்ருதம் to ஸோமன்

3741. ஸூந்ருதம் = மங்களம், சுபம், உண்மையான பேச்சு, பிரியமான பேச்சு.

3742. ஸூர: = சூரியன், அரசன், கவிஞன், கற்றறிந்தவன், சோம என்னும் கொடி, எருக்க இலை அல்லது செடி.

3743. ஸூரி: = சூரியன், முனிவர், கற்றறிந்தவன், புரோகிதர், கிருஷ்ணன்.

3744. ஸூர்ய: = சூரியன், எருக்கஞ்செடி.

3745. ஸூக்ஷ்ம = நுட்பமான, சூட்சுமமான, சிறியதான, கூர்மையான, மெல்லிய, சாதுர்யமான, சரியான.

3746. ஸூக்ஷ்மம் = சூக்ஷும தத்துவம், பரம்பொருள், சூட்சுமத் தன்மை, திறமை, வஞ்சனை, மோசடி, ஒரு சொல் அணி.

3747. ஸூக்ஷ்ம: = அணு.

3748. ஸ்ருஜ் = உண்டுபண்ண, பிறப்பிக்க, செய்ய, விட்டுவிட, தள்ளிவிட, அணிய, கொட்ட, ஏறிய, அனுப்ப.

3749. ஸ்ருணீ: = அங்குசம்.

3750. ஸ்ருஷ்டி: = படைப்பு, விட்டு விடுதல், கொடுத்தல், இயற்கை குணம், மக்கள், குழந்தைகள்.

3751. ஸேசனம் = பாய்ச்சுதல், தெளித்தல்.

3752. ஸேது: = வரப்பு, அணை, பாலம், எல்லை, பிரணவ மந்திரம்- ஓம்.

3753. ஸேனா = படை, போர்ப்படை.

3754. ஸேனானீ = ஸேனாபதி: = படைத்தலைவன், முருகன்.

3755. ஸேவக: = வேலைக்காரன், தையற்காரன், பை.

3756. ஸேவா = தொண்டு, பணிவிடை, பூஜை, வணக்கம், உபயோகம், பற்றுதல்.

3757. ஸோத3ர: = ஸோத3ர்ய: = உடன் பிறந்தவன்.

3758. ஸோபானம் = படிக்கட்டு.

3759. ஸோம: = சந்திரன், அமிர்தம், சிவன், தண்ணீர், சோமலதை என்னும் ஒரு கொடி.

3760. ஸோமன் = சந்திரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *