3721. ஸுமதி: = நல்ல சுபாவம், நல்ல மனம், நல்ல புத்தி, உபகாரம், கிருபை, ஆசீர்வாதம், பிரார்த்தனை.
3722. ஸுமுக2: = கணேசர், சிவன், கருடன், கற்றறிந்தவன்.
3723. ஸுர: = தேவன், சூரியன்.
3724. ஸுரபி4: = நல்ல மணம், சம்பக மரம், கடம்ப மரம், பொன், வசந்த காலம், ஜாதிக்காய், பசு, காமதேனு, துளசி, பூமி, மதுபானம், கந்தகம்.
3725. ஸுரா = கள், தண்ணீர், குடிக்கும் பாத்திரம்.
3726. ஸுவர்ணம் = ஸ்வர்ணம் = தங்கம், தங்கக் காசு.
3727. ஸு ஷமா = அதிக அழகு, அதிக காந்தி.
3728. ஸு ஷுப்தி: = ஆழ்ந்த உறக்கம், அறியாமை.
3729. ஸு ஷும்னா = உடலின் ஒரு முக்கிய நாடி.
3730. ஸூகர: = பன்றி.
3731. ஸூசக: = துளை போடுபவன், ஊசி, துளைபோடும் கருவி, செய்தி தெரிவிப்பவன், காக்கை, நாய்.
3732. ஸூசனம் = ஸூசனா = துளைதல், அறிவித்தல், ஜாடை.
3733. ஸூசி: = ஸூசீ = துளையிடுதல், ஊசி, கூர்மையான நுனி, கூம்பு, குறிப்பு, அட்டவணை, நூலின் பொருளடக்கம்
3734. ஸூசிகா = ஊசி, யானையின் துதிக்கை.
3735. ஸூத: = தேரோட்டி, தேர் தச்சன், சூரியன்.
3736. ஸூதி: = பிறவி, பிறப்பு, குழந்தை.
3737. ஸூத்ரம் = கயிறு, கம்பி, நூல், பூணூல், சூத்திரம், சுருக்கமான சொல்.
3738. ஸூத3: = சேதம் செய்தல், கொலை, கிணறு, சமையல் செய்பவன், மண், குற்றம்.
3739. ஸூனா = மகள், நதி, ஒளிக்கிரணம், இடுப்புப் பட்டை, கசாப்புக் கடை, கொல்லுதல்.
3740. ஸூனு: = மகன், குழந்தை, தம்பி, சூரியன்.