186. ஸுக2ம் to ஸும:

3701. ஸுக2ம் = நலம், ஆனந்தம், மகிழ்ச்சி, சுபம், சுவர்க்கம், தண்ணீர்.

3702. ஸுக3ந்த4ம் = நல்ல வாசனை, சந்தனம்.

3703. ஸுக்3ரீவ: = அன்னப் பக்ஷி, தலைவன், வீரன், வானர அரசன் சுக்ரீவன்.

3704. ஸுசரித = ஸுசரித்திர = நல்ல ஒழுக்கம் உடைய.

3705. ஸுசிரம் = நீண்ட காலம் வரை.

3706. ஸுஜன: = நல்ல மனிதன்.

3707. ஸுத: = மகன், அரசன்.

3708. ஸுதா = ஸூநூ = மகள்.

3709. ஸுதி3னம் = நல்ல நாள்.

3710. ஸுதூ3ரம் = நெடுந்தூரம்.

3711. ஸுதா4 = அமிர்தம், சுண்ணாம்பு, தேன், தண்ணீர்.

3712. ஸுதீ4: = கற்றறிந்தவன், பண்டிதன்.

3713. ஸுந்த3ர = அழகான, பிரியமான, மனத்தைக் கவரும்.

3714. ஸுபத2: = நல்ல சாலை, நல்ல பாதை.

3715. ஸுபர்ண: = கருடன், கந்தர்வன், சூரிய கிரணம்.

3716. ஸுப்தி: = தூக்கம், நம்பிக்கை.

3717. ஸுப4க3 = பாக்கியசாலியான, அழகான, பிரியமான.

3718. ஸுபா4ஷிதம் = அழகான பேச்சு, நீதி வாக்கியம்.

3719. ஸுபி4க்ஷம் = செழிப்பு, க்ஷேமம், வளமை.

3720. ஸும: = சந்திரன், ஆகாயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *