3681. ஸாவதா4னம் = கவனத்துடன், நிதானமாக.
3682. ஸாவித்ரீ = பார்வதி, சத்யவானின் மனைவி, உபநயனச் சடங்கு, காயத்ரீ மந்த்ரம், ஒளிக் கிரணம்.
3683. ஸாஹஸம் = பலாத்காரம், வேகத் தன்மை, தண்டனை, கொடுமை, தவறான செயல், தைர்யம் , பிடிவாதம்.
3684. ஸாஹாய்யம் = உதவி, தோழமை.
3685. ஸாஹித்யம் = இலக்கிய படைப்பு, சாஹித்ய சாஸ்திரம், சேர்க்கை, சேருதல்.
3686. ஸிம்ஹ: = சிங்கம், சிம்ம ராசி, முக்கியமானவன்.
3687. ஸிகதா = மணல், மணல் பாங்கான நிலம்.
3688. ஸிச் = வெண்மையான, சூழப்பட்ட, கட்டப்பட்ட, முடிக்கப்பட, அறியப்பட்ட.
3689. ஸித = வெண்மையான.
3690. ஸிதா = சர்க்கரை, அழகான ஸ்த்ரீ, நிலா.
3691. ஸித்3த4 = நிறைவேறின, முழுமை அடைந்த, தீர்க்கப்பட்ட, ஸ்தாபிக்கப்பட்ட, விடுபட்ட, புனிதமான, சுத்தமான, புகழ் வாய்ந்த, தெய்வத் தன்மை வாய்ந்த.
3692. ஸித்3தா4ந்த: = பிரமாண உண்மை, பயன், முடிவு, கொள்கை, வாதத்தின் முடிவு.
3693. ஸித்3தி4: = பூர்த்தி, செய்து முடித்தல், லயித்துப் போதல், மோக்ஷம், தெய்வீக சக்தி, தீர்மானித்தல்.
3694. ஸிந்து4: = கடல், ஸிந்து நதி, ஸிந்து நாடு.
3695. ஸீதா = உழும் போது நிலத்தில் ஏற்படும் பள்ளமான கோடு, விவசாயம், ஜனகனின் வளர்ப்பு மகள்.
3696. ஸீமந்த: = எல்லைக் கோடு, தலை மயிரின் வகிடு.
3697. ஸீமா = எல்லை, ஓரம், கரை, அண்டம், வயல்.
3698. ஸீர: = கலப்பை, சூரியன்.
3699. ஸு = நல்ல, சரியான, மேலான, அழகான, பூர்த்தியான (என்னும் பொருள் தரும் ஒரு prefix)
3700. ஸுக்ருதம் = நல்ல காரியம், நல்ல செயல், கிருபை, தயை, புண்ணியம்.