3661. ஸாமந்த = பொதுவான, உலகம் முழுவதும் பரவிய, அருகிலுள்ள, எல்லையிலுள்ள.
3662. ஸாமர்த்யம் = சக்தி, வலிமை, திறமை, போதுமானது.
3663. ஸாமான்ய = பொதுவான, சமமான, அற்பமான, சாதாரணமான, பூரணமான.
3664. ஸாமான்யம் = சமூஹம், கூட்டம், வகை, சமமானது, பொதுவானது, ஒரே உருவம் கொண்டவை.
3665. ஸாமீப்யம் = அருகில் இருப்பது, சமீபம்.
3666. ஸாம்ப்ரத = உசிதமான, தகுதியான, பொருத்தமான.
3667. ஸாம்யம் = ஒப்பானது.
3668. ஸாம்ராஜ்யம் = பெரிய நாடு, சாம்ராஜ்யம்.
3669. ஸாய: = முடிவு, அம்பு, மாலை வேளை.
3670. ஸாயம் = மாலை வேளையில்.
3671. ஸார: = ஸாரம் = சத்து, சாரம், சாறு, நூலின் சுருக்கம், திறமை, சக்தி, வலிமை, கோந்து, அமிர்தம், ஒரு நோய், மேன்மை, சூரத்தனம், உடலில் உள்ள கொழுப்பு.
3672. ஸாரங்க3: = மான், புள்ளிமான், யானை, வண்டு, சிங்கம், மேகம், அன்னப் பக்ஷி, மன்மதன், கற்பூரம், தாமரை, ஒரு இசைக் கருவி.
3673. ஸாரதி2: = தேர் ஓட்டுபவன், உதவியாள், கடல்.
3674. ஸாரமேய: = நாய்.
3675. ஸாரூப்யம் = உருவத்தில் ஒப்பு, முக்தியில் ஒரு வகை.
3676. ஸார்த2 = பொருளுடன் கூடிய, செல்வம் படைத்த, அர்த்தம் உள்ள.
3677. ஸார்த4 = ஒன்றுக்கு மேல் பாதி சேர்ந்த.
3678. ஸார்வபௌ4ம: = சக்கரவர்த்தி, அரசர்கோன்.
3679. ஸால: = மதில் சுவர், கோட்டை மதில் சுவர், சுவர், மரம், சால மரம்.
3680. ஸாவாகாச’ம் = ஓய்வுடன், சௌகரியப்படி.