3641. ஸஹாயதா = ஸஹாயத்வம் = ஸ்நேஹம், நட்பு, சேருதல், உதவி, தோழர்களின் கூட்டம்.
3542. ஸஹித = கூடவுள்ள, இணைந்த, கூட.
3643. ஸஹ்ய = சாஹிக்கக் கூடிய, தாங்கக் கூடிய.
3644. ஸா = லக்ஷ்மி, பார்வதி, அவள்.
3645. ஸாங்3க = அங்கங்களுடன் கூடிய, பகுதிகளுடன் கூடிய.
3646. ஸாத்விக = உள்ளது உள்ளபடி, உண்மையான, அவசியமான, நல்ல, சரியான, சத்வ குணமுடைய.
3647. ஸாத3னம் = களைப்பு, சேதம் செய்தல், வீடு, இருப்பிடம்.
3648. ஸாத்3ருச்’யம் = ஒருமைப்பாடு, சமமானது, ஒரே உருவம் உள்ளது, படம், உருவம்.
3649. ஸாத4னம் = காரியத்தை செய்து முடித்தல், பூர்த்தி செய்தல், உபாயம், கருவி, காரணம், சாமான்கள், அடக்குதல், ஜெயித்தால், தவம், சேனை, மோக்ஷம்.
3650. ஸாதா4ரணம் = பொதுவான, வழக்கமான, சாமான்யமான, சமமான.
3651. ஸாது4 = பொருத்தமான, தகுதியான, நல்ல, சரியான, மேலான.
3652. ஸாது: = நல்லவன், முனிவன், சாது, வியாபாரி, வட்டிக் கடைக்காரன்.
3653. ஸாத்3ய = செய்யத் தக்க, அடையத் தக்க, செய்து முடிக்கத் தக்க, முடிந்த.
3654. ஸாத்வீ = பதிவிரதை, நல்லவள்.
3655. ஸானு = மலை உச்சி, மலை மீதுள்ள சமதள பூமி, முளை, காடு, சூரியன், சாலை, பாதை, கற்றறிந்தவன்.
3656. ஸாந்த3ர = நெருக்கமான, கூட்டமான, அதிகமான, மிகுதியான, பருத்த, பலமான.
3657. ஸாந்நித்4யம் = அருகில் இருத்தல், எதிரில் இருத்தல்.
3658. ஸாப2ல்யம் = லாபம், வெற்றி, பயன் அளிக்கும் தன்மை.
3659. ஸாமக்3ரி = சாமான்கள், பொருள், கருவி.
3660. ஸாமன் = அமைதிப் படுத்துதல், சமாதானம் செய்தல், அடக்கம், மென்மை, சாமவேதம்.