182. ஸர்வ to ஸஹாய:

3621. ஸர்வ = எல்லாமான, முழுதுமான.

3622. ஸர்வ: = விஷ்ணு, சிவன்.

3623. ஸர்வஜித் = ஒரு ஆண்டின் பெயர், எல்லோரையும் ஜெயித்தவன்.

3624. ஸர்வக்ஞ: = சிவன், எல்லாம் அறிந்தவன்.

3625.ஸர்வத: = எங்கும், எல்லாப்பக்கங்களிலும்.

3626. ஸர்வத்ர = எல்லா இடங்களிலும், ஒவ்வொரு இடத்திலும், எப்போதும்.

3627. ஸர்வதா2 = முற்றிலும், முழுவதும், எக்காலத்திலும், எல்லாவிதத்திலும், எல்லா வழிகளிலும்.

3628. ஸர்வதா3 = எக்காலத்திலும், எப்போதும்.

3628. ஸர்வச’: = முழுவதும், எவ்விடத்திலும், எப்பக்கத்திலும்.

3630. ஸலிலம் = தண்ணீர்.

3631. ஸவ: = யாகம், நீர்க்கடன் கொடுத்தல், சோமக் கொடியைப் பிழிதல், சந்ததி, சூரியன், சந்திரன்.

3632. ஸவித்ரு = சூரியன், சிவன், இந்திரன், எருக்கஞ்செடி.

3633. ஸவித்ரி = தாய், பசு.

3634. ஸவ்ய = இடது, தென்புறமான, எதிரிடை, தலை கீழான.

3635. ஸஸ்யம் = தானியம், பயிர், நற்குணம்.

3636. ஸஹ = ஸாகம் = கூட, சேர்ந்து.

3637. ஸஹஸா = பலாத்காரமாக, உடனடியாக, எதிர்பாராது, புன்சிரிப்புடன், ஆலோசிக்காமல்.

3638. ஸஹஸ்ரம் = ஆயிரம்.

3639. ஸஹஸ்ராம்சு’ = ஸஹஸ்ரார்சி: = ஸஹஸ்ரஷ்மி = சூரியன்.

3640. ஸஹாய: = நண்பன், தோழன், சிவன், பின் பற்றுபவன், உதவி செய்பவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *