3601. ஸம்பா4ர: = தேவையான பொருட்கள், சேர்க்கை, சேர்த்தல், தயாரித்தல், கூட்டம், குவியல், நிறைவு, உதவி.
3602. ஸம்பா4வனம் = ஸம்பா4வனா = சன்மானம், மரியாதை, தகுதி, சந்தேகம், எண்ணம், ஆலோசித்தல், எண்ணுதல்.
3603. ஸம்பா4ஷா = ஸம்பா4ஷணம் = பேசுதல், சம்பாஷணை.
3604. ஸம்ப்4ருத = நிறைந்த, சேர்க்கப்பட்ட, சுமக்கப்பட்ட, உண்டாக்கப்பட்ட, அடையப்பட்ட, வளர்க்கப்பட்ட, தயார்
செய்யப்பட்ட, வைக்கப்பட்ட.
3605. ஸம்போ4க3: = சுகம், ஆனந்தம், புணர்ச்சி.
3606. ஸம்ப்4ரம: = சுழற்சி, குழப்பம், ஊக்கம், சிரத்தை, பயம், குற்றம், குறை, அவசரம்.
3607. ஸம்மதம் = இணக்கம், ஒப்புதல்.
3608. ஸம்மதி: = ஆமோதித்தல், இணக்கம், ஒப்பு, ஆசை, விருப்பம், மதிப்பு, பிரியம், சிநேஹம்.
3609. ஸம்மான: = மரியாதை, மதித்தல்.
3610. ஸம்மேளனம் = கூடுதல், கலத்தல், சபை, சேர்த்தல்.
3611. ஸம்மோஹ: = குழப்பம், பரபரப்பு, மயக்கம், வசீகரித்தல், அறியாமை, மடத்தனம்
3612. ஸம்ராஜ் = சக்கரவர்த்தி.
3613. ஸரணி: = ஸரணீ = வழி, பாதை, போக்கு, வரிசை.
3614. ஸரள = கபடம் அற்ற, சுலபமான, நேரான.
3615. ஸரஸ் = குளம், ஏரி, பொய்கை, தண்ணீர்.
3616. ஸரஸிஜம் = ஸரஸிருஹம் = ஸரோஜம் = தாமரை.
3617. ஸரஸ்வதி = கல்வியின் தேவதை, சொல், பேச்சு, மேலான ஸ்திரீ, பசு, ஒரு நதியின் பெயர்.
3618. ஸரித் = நதி, கயிறு.
3619. ஸர்க3: = தியாகம், விட்டுவிடுதல், இயற்கை குணம், சிருஷ்டி, படைப்பு, தீர்மானம், காப்பியத்தின் பகுதி, ஒப்பு, உலகு, வேகமாகச் செல்லுதல்.
3620. ஸர்ப்ப: = நல்ல பாம்பு, போக்கு, செல்லுதல்.