18. குவலயம் to கேதா3ர:

341. குவலயம் = கரு நெய்தல், அல்லிப்பூ, பூமி.

342. குச’ல = சரியான, உகந்த, மங்களகரமான, சுபமான, தகுந்த, கெட்டிக்கார, புத்திசாலியான.

343. குஸுமம் = புஷ்பம், பழம்.

344. குஸுமாகர: = பூந்தோட்டம், பூங்கொத்து, வசந்த காலம்.

345. கூடம் = கபடம், வஞ்சனை, மாயம், குயுக்தி, நெற்றி எலும்பு, கொம்பு, நுனி, மூலை, கூண்டு, வலை.

346. கூசிகா = வர்ணம் பூசும் பிரஷ், பென்சில், சாவி, மொக்கு, ஊசி, புஷ்பம்.

347. க்ருதம் = செயல், தொண்டு, லாபம், பயன், முடிவு, நோக்கம், முதல் யுகம்.,

348. க்ருதக்ருத்ய = தான் செய்ய வேண்டியதை செய்து முடித்த, குறிக்கோளை அடைந்த, திருப்தி அடைந்த.

349. க்ருதாஞ்சலி = கை கூப்பி வணங்கி.

350. க்ருதாந்த: = விதி, தலை எழுத்து, முடிவு, கொள்கை, சித்தாந்தம்.

351. க்ருதி: = செய்தல், உண்டு பண்ணுதல், காரியம், செயல், படைப்பு, காவியம் இயற்றுதல்.

352. க்ருத்ரிம = செயற்கையான, கற்பனை செய்யப்பட, பொய்யான, ஸ்வீகாரம் செய்யப்பட.

352. க்ருபண = ஏழ்மையான, உதவியற்ற, விவேகமற்ற, கஞ்சத்தனமான, மட்டரகமான.

354. க்ருபா = கருணை, அருள், தாராள மனப்பான்மை.

355. க்ருமி: = புழு, கழுதை, சிலந்தி, அரக்குச் சாயம்.

356. க்ருஷி: = விவசாயம், உழுதல்.

357. க்ருஷ்ண: = கருநிறம், கருப்பு மான், காக்கை, கிருஷ்ண பக்ஷம், வியாசர், கிருஷ்ணன், அர்ஜுனன்.

358. க்ருஷ்ண சர்ப்ப: = கருநாகம்.

359.கேதனம் = வீடு, இருப்பிடம், அழைப்பு, இடம், கொடி, அடையாளம்.

360. கேதா3ர: = நீர் பாய்ந்த வயல், மலை, சிவனின் ஒரு பெயர், ஒரு புண்ய க்ஷேத்ரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *