178. ஸந்தி3ஷ்ட to ஸமன்வித

3541. ஸந்தி3ஷ்ட = குறிக்கப்பட்ட, முன்சொல்லப்பட்ட.

3542. ஸந்தே3ச’: = செய்தி, உத்தரவு, கட்டளை,சமாசாரம்.

3543. ஸந்தே3ஹ: = சந்தகம், அபாயம், நிச்சயமற்றது.

3544. ஸந்தி4: = சேருமிடம், கலப்பு, ஒப்பந்தம், நட்பு.

3545. ஸந்த்4யா = இணைப்பு, பாகம், எல்லை, பிரதிக்ஞை, காலை சந்தி, மாலை சந்தி.

3546. ஸன்னத்3த4 = தயாராக உள்ள, கவசம் அணிந்த, கட்டப்பட்ட.

3547. ஸந்நிதா4னம் = ஸந்நிதி4: = அருகாமை, எதரே இருத்தல், தோற்றம், கூட்டு, சேர்க்கை, பெறுதல், எடுத்துக் கொள்ளல்.

3548. ஸந்நிவேச’ : = கூட்டம், இணைப்பு, ஒழுங்கு, பற்று, நிலை, அருகாமை, உருவம், இடம், இருப்பிடம், மைதானம், சந்தர்ப்பம், சூழ்நிலை.

3549. ஸந்நிஹித = அருகிலுள்ள, பொருந்திய, எதிரிலுள்ள, தயாராக உள்ள.

3550. ஸன்யாஸின் = துறவி, உலகப்பற்றைக் களைந்தவன்.

3551. ஸபத்னி = சக்களத்தி.

3552. ஸபர்யா = பூஜை, பணிவிடை.

3553. ஸப்தன் = ஏழு என்னும் எண் உரிச்சொல்.

3554. ஸப்தம = ஏழாவதான.

3555. ஸபா4 = சபை, குழு, சமாஜம்.

3556. ஸபா4ஜனம் = வணங்குதல், வரவேற்பு, தொண்டு, கௌரவித்தல்.

3557. ஸம = சமமான, ஒரே உருவம் உடைய, மேடுபள்ளம் அற்ற, சமதளமான, நடுவில் உள்ள.

3558. ஸமதா = ஸமத்தவம் = சமமானது, ஒரே மாதிரியானது.

3559. ஸமன்வய = ஒழுங்குமுறை, கருத்து ஒற்றுமை, கோர்வை.

3560. ஸமன்வித = தொடர்பு கொண்ட, தொடர்பு பெற்ற, தழுவப்பட்ட.

4 thoughts on “178. ஸந்தி3ஷ்ட to ஸமன்வித

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *