3521. ஸத்கார: = கௌரவித்தல், வெகுமானம், விருந்தோம்பல்.
3522. ஸத்க்ருதி: = நல்ல குணம், நற்செய்கை, கௌரவித்தல்.
3523. ஸத்தா = இருப்பு, உண்மை, மேன்மை.
3524. ஸத்யம் = உண்மை, பிரதிக்ஞை, சபதம், கிருதயுகம், பரம்பொருள், தண்ணீர்.
3525. ஸத்ரம் = யாகம், வேள்வி, அக்னியில் அர்ப்பணிக்கப்படும் பொருள், வீடு, ஆசிரமம், காடு, செல்வம், நன்கொடை, தானம், மறைப்பு.
3526. ஸத்வம் = இருப்பு, இயற்கை, ஸ்வபாவம், உண்மை, சாமர்த்தியம், வலிமை, சக்தி, உயிர், பிராணி, பூதம், பிசாசு, நற்குணம், மனம், புத்தி, உணர்ச்சி , செல்வம், வஸ்து, கர்ப்பம், மூலதத்வம், சூக்ஷ்ம உடல்.
3527. ஸத்வரம் = வேகமாக, சீக்கிரமாக.
3528. ஸத3ஸ் = சபை, இருப்பிடம்.
3529. ஸத3ஸ்ய: = சபையில் உள்ளவன்.
3530. ஸதா3 = எப்போதும்.
3531. ஸத்3ருச’ = சமமான, தகுந்த, தக்க, ஒரேவிதமான.
3532. ஸத்3ருஸ் = உடனடியாக, இன்று.
3533. ஸநாதன = சாஸ்வதமான, முன் காலத்திய, திடமான.
3534. ஸநாத2 = கூடிய, சேர்ந்த, கணவனுடன் கூடிய, கணவன் உள்ள.
3535. ஸந்தான: = ஸந்தானம் = ஸந்ததி: = குலம், வம்சம், பரம்பரை, குழந்தை, நீட்டுதல், விஸ்தாரம், குடிமக்கள்.
3536. ஸந்தர்ப்பணம் = மகிழ்வித்தல், திருப்தி செய்தல்.
3537. ஸந்தாப: = வெப்பம், துக்கம், கோபம், தவம், வேதனை, பீடை.
3538. ஸந்துஷ்டி: = ஸந்தோஷ; = திருப்தி, மகிழ்ச்சி, ஆனந்தம்.
3539. ஸந்த3ர்ப்ப4: = கலப்பு, சேர்க்கை, கட்டுரை, படைப்பு, சந்தர்ப்பம், சமயம்.
3540. ஸந்தி3க்3த4 = பூசப்பட்ட, மெழுகப்பட்ட, மறைக்கப்பட்ட, நிச்சயமற்ற, சந்தேகமான, குழப்பமான.