175. ஸக்2ய to ஸங்க3தி:

3481. ஸக்2ய= ஸகி = நண்பன், தோழன்.

3482. ஸகீ = தோழி, தாதி.

3483. ஸக்2யம் = நேசம், நட்பு.

3484. ஸகு3ண = நற்குணங்கள் உள்ள, உலகத்தொடர்புள்ள.

3485. ஸங்கடம் = குறுகிய பாதை / சாலை , துன்பம், கவலை, கடினமான .

3486. ஸங்கர: = கலப்பு, இணைப்பு, ஜாதிகளின் கலப்பு.

3487. ஸங்கர்ஷணம் = இழுத்தல், உழுதல், வசீகரித்தல்.

3488. ஸங்கலித = ஒன்று சேர்க்கப்பட்ட, குவிக்கப்பட்ட, கலக்கப்பட்ட.

3489. ஸங்கல்ப: = நோக்கம், மனவலிமை, குறிக்கோள், உத்தேசம், எண்ணம், விருப்பம், எண்ணம், நினைப்பு, கற்பனை, திட்டம்.

3490. ஸங்கீர்ண = ஒன்றுடன் ஒன்று கலந்த, குறுகிய, சுருங்கிய, ஒழுங்கற்ற, சிதறிய, தெளிவற்ற, கலப்படமான.

3491. ஸங்கீர்த்தனம் = துதித்தல், புகழுதல், பஜனை.

3492. ஸங்குசித = சுருக்கப்பட்ட, மூடப்பட, குறுகிய.

3493. ஸங்குலம் = குழப்பமான கூட்டம், சேர்க்கை, முன்னுக்குப்பின் விரோதமான பேச்சு.

3494. ஸங்கேத: = ஜாடை, குறிப்பு, அடையாளம், ஒப்புதல், நிபந்தனை.

3495. ஸங்கோச: = பயம், வெட்கம், கட்டுதல், சுருக்குதல், கட்டுதல்.

3496. ஸங்க்ரமணம் = போக்கு, மாறுதல், சூரியன் ராசி மாறுதல், மஹா சங்கராந்தி, ஒப்பு, ஒத்திருத்தல்.

3497. ஸங்க்2யா = எண், எண்ணிக்கை, கணக்கிடுதல், காரணம், வழி, முறை, சிந்தித்தல்.

3498. ஸங்க3: = தொடர்பு, பற்று, பாசம், நட்பு, பிரியம், சேர்க்கை.

3499. ஸங்க3த = இணைக்கப்பட்ட , சேர்க்கப்பட்ட, திருமணத்தால் இணைந்த.

3500. ஸங்க3தி: = சேருதல், சந்தித்தல், சேர்க்கை, புணர்ச்சி, கூடுதல், தொடர்பு, சம்பவம், அறிவு, தகுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *