173. ச்’ரேணி: to ச்’வசு’ர:

3441. ச்’ரேணி: = ச்ரேணீ = வரிசை, கோடு, கூட்டம், சங்கம்.

3442. ச்’ரேயஸ் = நற்குணம், நல்ல காரியம், சுபம், மங்களம், ஆசி, மோக்ஷம், நல்ல தருணம்.

3443. ச்’ரேயஸ்கர = சுபமான, மகிழ்ச்சியளிக்கும், மங்களகரமான.

3444. ச்’ரேஷ்ட = மேலான, பிரியமான, சிறந்த, மேன்மையான.

3445. ச்’ரேஷ்ட: = அரசன், அந்தணன், விஷ்ணு, மேலானவன்.

3446. ச்’ரோணி: = ச்’ரோணீ = இடுப்பு, பிட்டம்.

3447. ச்’ரோதஸ் = காது, புலன், துதிக்கை, நீரோடை, நீரோட்டம்.

3448. ச்’ரோத்ரு: = கேட்பவன், மாணவன், சீடன்.

3449. ச்’ரோத்ரம் = வேதம், காது.

3450. ச்’ரோத்ரீய: = வேதம் அறிந்தவன், கற்றறிந்தவன்.

3451. ச்’ரௌதம் = வேள்வி அக்னி ( மூன்று அக்னிகள்), வேதத்தில் கூறப்பட்ட கர்மா.

3452. ச்’லக்ஷ்ண = மிருதுவான, வழவழப்பான, சிறிய, நேர்த்தியான, மெல்லிய, அழகான, நேர்த்தியான, மேன்மையான.

3453. ச்’லாகணம் = ச்லாகா = புகழ்தல், துதி செய்தல்.

3454. ச்’லாக்ய = புகழத்தக்க, மேலான.

3455. ச்’லிஷ்ட = தழுவிக் கொள்ளப் பட்ட, ஒட்டிய, ஒட்டிக் கொண்ட, இரட்டைப் பொருளுடன் கூடிய.

3456. ச்’லே ஷ: = தழுவிக்கொள்ளல், ஒட்டிக்கொள்ளல், பின் பற்றல் சேர்க்கை, கூடுதல், சிலேடைச் சொல்.

3457. ச்’லேஷ்மன் = கபம்.

3458. ச்’லோக: = செய்யுள், கவிதை, முதுமொழி, தோத்திரம், துதி, புகழ்.

3459. ச்’வன் = ச்’வான: = நாய்.

3460. ச்’வசு’ர: = மாமனார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *