3421. ச்’யால: = மைத்துனன்.
3422. ச்’ரத்3தா4= நம்பிக்கை, மதச் சடங்குகளில் ஊக்கம், மன அமைதி, வலுத்த ஆசை.
3423. ச்’ரம: = சிரமம், செயல், உழைப்பு, முயற்சி, கஷ்டம் துக்கம், பயிற்சி, சாதனை, களைப்பு.
3424 ச்’ரவ: = கேட்டல், காது.
3425. ச்’ரவண: = ச்’ரவணம் = காது, முக்கோணத்தின் கர்ணம், சிரவண நக்ஷத்திரம்.
3426. ச்’ரவஸ் = காது, செல்வம், புகழ், நதி, ஓடை, புகழ்க்கவிதை.
3427. ச்’ரவிஷ்டா = சிரவண நக்ஷத்திரம், அவிட்ட நக்ஷத்திரம்.
3428. ச்’ராத்3த4ம் = இறந்துபோன முன்னோருக்குச் செய்யும் சடங்கு.
3429. ச்’ராந்த = களைப்படைந்த, அமைதியான.
3430. ச்’ராவ்ய = கேட்கத் தக்க, தெளிவாகக் கேட்கும்.
3431. ஸ்ரீ = செல்வம், சொத்து, மகிமை, லக்ஷ்மி, அழகு, காந்தி, நற்குணம், மேன்மை, தாமரைப் பூ, வில்வ மரம்.
3432. ஸ்ரீகண்ட: = சிவன்.
3433. ஸ்ரீசக்ரம் = பூ மண்டலம், தேவியின் ஸ்ரீ சக்ர யந்த்ரம்.
3434. ஸ்ரீத4ர: = ஸ்ரீனிவாஸ: = ஸ்ரீபதி: = ஸ்ரீ வத்ஸ: = ஸ்ரீ வத்ஸாங்க: = விஷ்ணு.
3435. ஸ்ரீமத் = செல்வம் படைத்த, அழகான, புகழ்வாய்ந்த, பாக்கியசாலியான, சுகமாக உள்ள.
3436. ஸ்ரீமத் = விஷ்ணு, குபேரன், சிவன், அரசமரம்.
3437. ச்’ரு = செல்ல, அசைய, ஆட, கேட்க, படிக்க, தொண்டுபுரிய.
3438. ச்’ருத = கேட்கப்பட்ட, காதில் விழுந்த, புரிந்து கொண்ட, தெரிந்து கொண்ட, புகழ் வாய்ந்த.
3439. ச்’ருதம் = வேதம், அறிவு, கேட்கப்பட்டது.
3440. ச்’ருதி: = கேட்டல், செய்தி, வதந்தி, வேதம், குரல், சப்தம், காது, புனித அறிவு, பேச்சு, பெயர், புகழ், இசையில் சுருதி.