171. சை’ல: to ச்’யாமா

3401. சை’ல: = மலை, பாறை, பெரிய கல்.

3402. சை’லீ = போக்கு, நடை, ஒழுக்கம், முறை, நடத்தை.

3403. சோ’க: = துக்கம், துன்பம்,வேதனை, அழுகை.

3404. சோ’ண: = சிவப்பு, நெருப்பு, சோனை நதி, செங்கரும்பு, சிவப்பு நிறக் குதிரை.

3405. சோ’ணம் = ரத்தம், சிந்தூரம்.

3406. சோ’த4னம் = சுத்தம் செய்தல், தவறு நீக்கல், கடன் தீர்த்தல், பிராயச்சித்தம், துத்தம், மலம்.

3407. சோ’ப4னம் = காந்தி, அழகு.

3408. சோ’பா4 = காந்தி, பளபளப்பு, அழகு, அலங்காரம், அணிகலன், மஞ்சள், நிறம்.

3409. சோ’பி4த = அழகுவாய்ந்த, பிரகாசிக்கின்ற, அலங்கரிக்கப்பட்ட.

3410. சோ’ஷ: = உலர்ந்து போதல், க்ஷயரோகம்.

3411. சோ’ஷணம் = உலர்ந்து போதல், வறண்டு போதல், மெலிந்து போதல், உறிஞ்சுதல், களைப்பு, சுக்கு.

3412. சௌ’சம் = நன்னடத்தை, சுத்தமான தன்மை, சுத்தமாக்குதல்.

3413. சௌ’ச்சகூப: = மலம் கழிக்கும் இடம்.

3414. செள’ரி: = விஷ்ணு, பலராமன், சனிகிரஹம்.

3415. சௌ’ர்யம் = பராக்கிரமம், பலம், சூரத்தனம்.

3416. ச்’மசா’னம் = மயானம்.

3417. ச்’மச்’ரு = மீசை, தாடி.

3418. ச்’யாம = கருப்பான, கருநீலமான.

3419. ச்’யாம: = கருப்பு, மேகம், பச்சைநிறம், குயில், அக்கூ பக்ஷி.

3420. ச்’யாமா = இரவு, இருள் சூழ்ந்த இரவு, யௌவன ஸ்த்ரீ, கறுப்பு ஸ்த்ரீ, நிழல், பசு, துளசிச்செடி, மஞ்சள், யமுனை நதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *