170. சு’ல்க: to சே’ஷ:

3381. சு’ல்க: = சு’ல்கம் = சுங்கம், வரி, திருமண உபகாரப் பணம், கன்னிகைக்காகக் கொடுக்கப்படும் பணம்.

3382. சு’ச்’ரூஷக: = வேலையாள், பணிவிடை செய்பவன்.

3383. சு’ச்’ரூஷணம்= சு’ச்’ருஷா = பணிவிடை, கேட்க விருப்பம்.

3384. சு’ஷ்க = உலர்ந்து போன, காய்ந்து போன, வறண்ட, மலிந்த, உபயோகமற்ற.

3385. சூ’கர: = பன்றி.

3386. சூ’ன்ய = இல்லாத, காலியான, தனியான.

3387. சூ’ன்யம் = ஆகாயம், விண்வெளி, பூஜ்யம்.

3388. சூ’ர : = வீரன், போர் வீரன், சூரன், சிங்கம், பன்றி, சூரியன்.

3389. சூ’ர்ப = சூர்பம் = முறம்.

3390. சூ’ர்பகர்ண: = யானை, விநாயகர்.

3391. சூ’ல:= சூ’லம் = கூர்மையான ஆயுதம், திரிசூலம், வேல், வலி, வயிற்று வலி.

3392. சூ’லின் = சிவன், சூலம் ஏந்தியவன், முயல்.

3393. ச்’ருகா3ல: = நரி, வஞ்சகன், கெட்டவன்.

3394. ச்’ருங்க3ம் = கொம்பு, மலையுச்சி, சிகரம், உயர்வு, உயரம், பீச்சாங்குழல்.

3395. ச்’ருங்கா3ர: = காதல், புணர்ச்சி, அடையாளம், ஒரு காவியச் சுவை.

3396. ச்’ருங்கீ3ன் = மலை, யானை, சிவன், சிவனின் பணியாள் ஸ்ருங்கீ.

3397. சே’கர: = கொண்டை, கிரீடம், உச்சி, சிகரம், முக்கியமானது, மேலானது.

3398. சே’வலம் = சை’வல: = நீர்ப்பாசி.

3399. சே’ஷ: = சே ஷம் = மீதியானது, பாக்கி, முக்தி.

3400. சே’ஷ: = ஆதிசே ஷன், பலராமன், முடிவு, சாவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *