168. சி’ல்பம் to சீ’தலா

3341. சி’ல்பம் = கலை, சிற்பக்கலை, கலைத்திறன், மதச் சடங்கு, யாகத்தில் உயயோகப் படும் மரக்கரண்டி.

3342. சி’ல்பின் = சிற்பி, கலை வல்லுனன்.

3343. சி’வ: = சிவன், வேதம், மோக்ஷம், ஆண்குறி, தேவதை, பாதரசம், கட்டுமுளை, குங்கிலியம், கோள்களின் நல்ல சேர்க்கை.

3344. சி’வம் = சுபம், ஆனந்தம், செழுமை, நன்மை, தண்ணீர், உப்பு, மோக்ஷம், நெல்லிமரம்.

3345. சி’வா = பார்வதி தேவி.

3346. சி’சி’ர: = சி’சி’ரம் = பனி, பனிக்காலம், சிசிர ருது.

3347. சி’சு’: = குழந்தை, மிருகங்களின் குட்டி,

3348. சி’ச்’னம் = ஆண்குறி.

3349. சி’ஷ்ட = மீதியான, பாக்கிவைக்கப்பட்ட, கட்டளையிடப்பட்ட, கற்பிக்கப்பட்ட, பழக்கப்பட்ட, கற்றறிந்த, மேலான, பூஜிக்கப்பட்ட, முக்கியமான, தர்ம புத்தி உடைய.

3350. சி’ஷ்ட: = முக்கியமானவன், மரியாதைக்கு உரியவன், புத்திசாலி மனிதன்.

3351. சி’ஷ்ய: = சீடன், படிப்பவன், பலவந்தம் செய்தல், கோபம்.

3352. சி’க்ஷக: = கற்பவன், கற்பிப்பவன்.

3353. சி’க்ஷணம் = கற்றல், கற்பித்தல்.

3354. சி’க்ஷா = படித்தல், கற்றல், கற்பித்தல், வேதங்களில் ஒன்று சிக்ஷை.

3355. சீ’க்3ர = சீ’க்3ரிய = விரைவான, வேகமான.

3356. சீ’க்3ரம் = சுறுசுறுப்பான, வேகமான.

3357. சீ’தா = சீ’தல = குளிர்ச்சியான, குளிரும், குளிரால் உறைந்த.

3358. சீ’தலம் = குளிர், சந்தனம், முத்து, தாமரை, குளிர்காலம்.

3359. சீ’தல: = சீதாம்சு = சந்திரன், கர்ப்பூரம்.

3360. சீ’தலா = சீதலீ = அம்மை, வைசூரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *