167. சா’ஸக: to சி’லா

3321. சா’ஸக: = அரசன், ஆளுநர்.

3322. சா’ஸனம் = ராஜ்ஜியம், ஆட்சி, அரசாட்சி, சட்டம், ஒழுங்கு, கட்டளை, பட்டா, தஸ்தாவேஜு, தண்டித்தல்.

3323. சா’ஸ்த்ரு = ஆசிரியன், அரசன், ஆளுபவன், தகப்பன்.

3324. சா’ஸ்த்ரம் = கட்டளை, விதி, சாஸ்திரம், விஞ்ஞானம்.

3325. சா’ஸ்த்ரின் = அறிவாளி, கற்றறிந்தவன்.

3326. சி’க2ண்டி3ன் = மயில், மயில்தோகை, அம்பு, சேவல், ஒரு வகை மல்லிகை, த்ருபதராஜனின் மகன்.

3327. சி’க2ர: = சி’க2ரம் = உச்சி, சிகரம், கொண்டை, குடுமி, சிவப்பு நிற ரத்தினம்.

3328. சி’க2ரிணி = அழகிய பெண், தொப்பிளுக்கு மேலே செல்லும் மயிர் வரிசை, சமஸ்கிருத செய்யுள் விருத்தங்களில் ஒன்று.

3329. சி’கா2 = தலை மயிர் கொத்து, குடுமி, கொண்டை, மயிலின் கொண்டை, சுவாலை, கிளை, ஒளிக் கிரணம்.

3330. சி’கி2ன் = மயில், அம்பு, சேவல், மரம், அக்னி, விளக்கு, குதிரை, எருது, மலை, ஸாது, கேது கிரகம்.

3331. சி’க்3ரு: = முருங்கை மரம், முருங்கைக்காய், கீரை, காய்கறி.

3332. சி’தி = வெண்மை, கருப்பான.

3333. சி’திகண்ட2: = சிவன், மயில்.

3334. சி’தி2ல= சி’தி2லித = அவிழ்ந்த, தளர்ந்த, ஓய்ந்துபோன, முறிந்த, துண்டிக்கப்பட்ட, பலமற்ற, பலஹீனமான.

3335. சி’பி3கா = சி’விகா = பல்லக்கு, ஊஞ்சல்.

3336. சி’பி3ரம் = முகாம், கூடாரம், தங்கும் இடம்.

3337. சி’ரம் = தலை, திப்பிலியின் வேர், மலையுச்சி, சிகரம், கபாலம், கலசம், முன்பக்கம், தலைப்பக்கம், தலைமை, முக்கியத்துவம்.

3338. சி’ரஸிஜ : = தலை மயிர்.

3339. சி’ரா = நரம்பு, தமனி, ரத்தக் குழாய்.

3340. சி’லா = கல், பாறை, மனோசிலை, கற்பூரம், சிரை, ரத்தக்குழாய், நரம்பு, இயந்திரக் கல், தூணின் தலைப்பகுதி.

2 thoughts on “167. சா’ஸக: to சி’லா

  1. Madam, please add words in “RajaRajeswari Ashtakam” and give the meaning of those words in Tamil. For example “Shaswatham” is not in the published dictionary.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *