3301. சா’த்3வல: = சாத்3வலம் = புல்வெளி.
3392. சா’ந்த = அமைதியான, சுபமான.
3303. சா’ந்தம் = போதும், இனி வேண்டாம்.
3304. சா’ந்தி: = அமைதி, பொறுமை, மௌனம், சப்தம் இன்மை,பசி அடங்குதல், பகை தீருதல்.
3305. சா’ப: =சாபம், சபதம், திட்டு, கெட்ட சொற்கள்.
3306. சா’ம்ப4வீ = பார்வதீ.
3307. சா’ரங்க3: = சாதகப்பக்ஷி, வண்டு, மான், மயில், யானை.
3308. சா’ரத3ம் = வெண் தாமரை, தானியம்.
3309. சா’ரதா3 = ஒரு வகை வீணை, சாரதாம்பாள், சரஸ்வதி.
3310. சா’ரிகா = மைனாக்குருவி, சதுரங்க விளையாட்டு, சதுரங்கக்காய்.
3311. சா’ர்ங்க3 = சா’ர்ங்க3ம் = விஷ்ணுவின் வில்.
3312. சா’ர்தூ3ல = புலி, சிறுத்தை, அரக்கன், சரபம் என்னும் பக்ஷி.
3313. சா’ல: = ஒரு வகை உயர்ந்த, பருத்த மரம், மீன், வேலி.
3314. சா’லா = அறை, மண்டபம், வீடு, இருப்பிடம், முக்கிய கிளை.
3315. சா’லாரம் = ஏணி, பறவைக் கூடு.
3316. சா’லி: = அரிசி, சம்பா நெல், புனுகுப் பூனை.
3317. சா’லீன் = வினயமுள்ள, வெட்கமுள்ள, சமமான.
3318. சா’ல்மலி: = சா’ல்மலீ = பூலோகத்தின் ஏழு பெரும் பகுதிகளில் ஒன்று, இலவ மரம்.
3319. சா’வக: = விலங்கின் கன்று.
3320. சா’ச்’வத = சா’ச்’வதிக = சா’ச்’வதம் = எப்போதும் உள்ள, நிரந்தரமான.