161. வ்யதிகர: to வ்யாபன்ன

3201. வ்யதிகர: = சேர்க்கை, சேருதல், கூடுதல், கலவை, கலப்பு, நிகழ்ச்சி, தருணம், வாய்ப்பு, சங்கடம், கஷ்டம், ஒன்றுக்கு ஒன்று கொண்டுள்ள தொடர்பு.

3202. வ்யதிக்ரம: = மிஞ்சுதல், தவறுதல், அதிக்ரமித்தல், மாறுபாடு, தலை கீழானது, பாவம், துயரம், துரதிர்ஷ்டம்.

3203. வ்யதிரிக்த = பிரிக்கப்பட்ட, தனியான, மேலான, இல்லாத.

3204. வ்யதிரேக: = பிரிவு , வித்தியாசம், தவிர்த்தல், மேன்மை.

3205. வ்யதா2 = பீடை, துன்பம், கவலை, பயம், நோய், அமைதியின்மை.

3206. வ்யய: = நாசம், அழிவு, இடையூறு, மறைவு, செலவு, வீழ்ச்சி, உபயோகித்தல்.

3207. வ்யவஸாய: = தீர்மானித்தல், முயற்சி, தொழில், வேலை, செய்கை, நடத்தை, யுக்தி, உபாயம்.

3208. வ்யவஸ்தா2 = வ்யவஸ்தி2: = வ்யவஸ்தா2னம் = நிலை, ஒழுங்கு, நிச்சயமான தன்மை, நன்கு அமைக்கப்பட்ட, திடத்தன்மை.

3209. வ்யவஸ்தி2த = ஒழுங்கு செய்யப்பட, ஸ்தாபிக்கப்பட்ட, உறுதியான.

3210. வ்யவஹார: = ஒழுக்கம், நடத்தை, தொழில், வேலை, வியாபாரம், வழக்கு, ஒழுங்கு, வழக்கம்.

3211. வ்யஸனம் = கேடு, நஷ்டம், அழிவு, வீழ்ச்சி, குற்றம், குறை, துக்கம், கெடுதி, அபாயம், காற்று, தண்டனை, பிரித்தல்.

3212. வ்யாகரணம் = சமஸ்கிருத இலக்கணம்.

3213. வ்யாக்2யானம் = வ்யாக்2யா = விவரித்தல், வர்ணனை, விரிவுரை, உரை.

3214. வ்யாக்4ர: = புலி, சிறந்தவன்.

3215. வ்யாக்4ரீ = பெண் புலி.

3216. வ்யாஜ: = கபடம் சூது, யுக்தி, உபாயம், பொய்க்காரணம், சாக்குப் போக்கு.

3217. வ்யாத4: = வேடன்.

3218. வ்யாதி4: = நோய்.

3219. வ்யாபக = பரவும், பரவலாக உள்ள.

3220. வ்யாபன்ன = பயனற்ற, சேதமடைந்த, துன்பமடைந்த, இறந்த.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *